ஆப்நகரம்

பணத்தை தராததால் பெண்ணை கடத்திய சம்பவம்: அமமுக நிர்வாகி கைது!

ஆள் கடத்தல் வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 20 Jun 2020, 2:53 pm
ராமநாதபுரம் மாவட்ட அமமுக, தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்டச் செயலர் கமுதி போஸ் செல்வா, இவருக்கு வயது 31. இவர் கமுதி பஸ் ஸ்டாண்டில் டீ டை வைத்துள்ளார்.
Samayam Tamil ammk ramanathapuram district official arrested in kidnap case


இக்கடைக்கு வந்த கமுதியில் வசிக்கும் ராணிபேட்டை சேர்ந்த சூர்யாவுடன் நட்பு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வேயில் உணவகம், டூவீலர் நிறுத்துமிட குத்தகை எடுத்து தருவதாக கூறி போஸ் செல்வாவிடம் சூர்யா ரூ.32 லட்சம் வாங்கியுள்ளார். கடந்த 6 மாதங்களாக எந்த கான்ட்ராக்ட் பெற்றும் தராததால், சூர்யாவிடம் போஸ்செல்வா பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.

பணத்தை திரும்ப கொடுக்காததால் சூர்யாவின் மனைவி துர்காவை 23, போஸ் செல்வா, இவரது நண்பர் பரமக்குடி மாரிசெல்வம் இருவரும் சேர்ந்து கடத்தி கமுதி பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள போஸ் செல்வா வீட்டில் அடைத்து வைத்தனர்.

பூசாரி வீட்டில் நகை, பணம் கொள்ளை: சேஸிங் செய்து பிடித்த போலீஸார்!


இதுகுறித்து ராமநாதபுரம் எஸ்.பி., வருண்குமாருக்கு அலைபேசியில் சூர்யா புகார் கொடுத்தார். இதன் பேரில் போஸ் செல்வா, மாரி செல்வம் ஆகியோர் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேலும் பணம் பெற்று ரயில்வேயில் குத்தகை எடுத்து தருவதாக ஏமாற்றியதாக, போஸ்செல்வா புகாரில் சூர்யாவை கமுதி போலீசார் கைது செய்தனர். இவர் மீது 2014, 2015, 2018 ல் கொலை முயற்சி தொடர்பாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

அடுத்த செய்தி