ஆப்நகரம்

ராமநாதபுரம்: பாத்திரத்தில் தலையை விட்டுக்கொண்ட பிஞ்சு குழந்தை..

பரமக்குடி அருகே குழந்தையின் தலையில் (Ramnad Child Head Struck in Vessel) எதிர்பாராத விதமாக சில்வர் பாத்திரம் மாட்டிக் கொண்டது. அதனை குழந்தையின் தலையில் இருந்து எடுக்க தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரமாக போராடி மீட்டனர்.

Samayam Tamil 19 Aug 2022, 6:30 pm

ஹைலைட்ஸ்:

  • குழந்தையின் தலையில் மாட்டிக்கொண்ட பாத்திரம்
  • குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது நேர்ந்த விபரீதம்
  • பாத்திரத்தை குழந்தையின் தலையில் இருந்து எடுக்க நீண்ட நேரம் போராட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ramanathapuram Baby Head Struck In Vessel

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கிளாாக்குளத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி - வனிதா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற ஆண் குழந்தை உள்ளது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்த நிலையில் இன்று அந்த பிஞ்சு குழந்தை வீட்டில் உள்ள சமையலறையில் விளையாடிக் கொண்டு இருந்துள்ளது. அப்போது அங்கு உள்ள பாத்திரம் ஒன்றை எடுத்து தலையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்த சமயம் அஜித் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக அந்த குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்டது. அதனால் வலி தாங்க முடியாமல் அஜித் நீண்ட நேரமாக கூச்சலிட்டு உள்ளார்.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நீண்ட நேரமாக குழந்தையின் தலையில் இருந்து பாத்திரத்தை எடுக்க பல மணி நேரமாக போராடி வந்தனர். இருப்பினும் அந்த பாத்திரத்தை குழந்தையின் தலையில் இருந்து எடுக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் பாத்திரத்தை எடுக்க முடியாததால் பரமக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு இருந்த தீயணைப்பு படை வீரர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அவர்களும் அதனை தலையில் இருந்து எடுக்க போராடி வந்தனர்.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அந்த குழந்தையின் தலையில் இருந்து பாத்திரம் வெட்டி எடுக்கப்பட்டு அந்த குழந்தையும் காயம் இன்றி பத்திரமாக மீட்கப்பட்டார். குழந்தையின் தலையில் பாத்திரம் மாட்டிக் கொண்ட சம்பவத்தால் அப்பகுதியில் வெகு நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அடுத்த செய்தி