ஆப்நகரம்

ராமநாதபுரம் புத்தகத் திருவிழா: மரக்கால் நடனமாடி பார்வையாளர்களை ஈர்த்த அரசுப்பள்ளி ஆசிரியர்..

ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பாரம்பரிய கிராமத்து மரக்கால் நடனம் ஆடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்துள்ளார்.

Samayam Tamil 19 Feb 2023, 1:42 pm

ஹைலைட்ஸ்:

  • ராமநாதபுரம் புத்தகத் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள்
  • அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
  • கலை நிகழ்ச்சியில் மரக்கால் நடனமாடிய அரசு பள்ளி ஆசிரியர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ramanathapuram book fair teacher marakkal dance
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஐந்தாவது புத்தகத் திருவிழா துவங்கப்பட்டது. இந்த புத்தகத் திருவிழாவானது பல ஆண்டுகள் கழித்து ராமநாதபுரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜா மேல்நிலை விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
அந்த முகவை சங்கமும் ஐந்தாவது புத்தக திருவிழாவில் ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான அரசு மற்றும் தனியார், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று வருகின்றனர். நேற்று இந்த புத்தகத் திருவிழாவில் ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றியது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

மேலும் நேற்று மாவட்ட கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட அரசுப்பள்ளி மாணவ மாணவியர் மட்டுமின்றி தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளின் மாணவ மாணவியர் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி மற்றும் கிராமிய பாடல்களுக்கு நேர்த்தியான நடனமாடி பார்வையாளர்களை அசத்தினர்.

மேலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த வர்ணனையாளர், அடுத்து இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ பெண்களின் சார்பில் தமிழர்களின் பாரம்பரியமிக்க கோலாட்டம் நிகழ்ச்சி நடைபெறும் என ஒளி பெருக்கியில் அறிவித்தார்.

இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வ பெண்களுடன் திடீரென மேடை ஏறிய கடலாடி அருகே உள்ள கீழச்சாக்குளம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்க பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி தற்போது தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான, இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்து வரும் ஆசிரியர் கலைமுருகன் என்பவர் கும்மியாட்டம் ஆடிய பெண்களுக்கு நிகராக நேர்த்தியாக மரக்கால் நடனமாடி அரங்கத்தில் குழுமியிருந்த பார்வையாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் , மாணவ மாணவியரின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் ஆசிரியர் கலைமுருகன் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளராகவும், தமிழ்நாடு ஆசிரியர் கலைக்குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வரும் இவர் கடந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் கொரோனா தொற்று நோயிலிருந்து தங்களை எவ்வாறு காத்துக் கொள்ள வேண்டும் என கமுதி, முதுகுளத்தூர், கடலாடி போன்ற பகுதிகளில் காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை பாடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி