ஆப்நகரம்

அமைச்சர் சிவி கணேசன் ராமநாதபுரத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செயல்பட்டுவரும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் ஆய்வு செய்தார்.

Samayam Tamil 21 Oct 2021, 11:50 pm
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிவி கணேசன் ஆய்வு மேற்கொண்டார். பரமக்குடி தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது:
Samayam Tamil அமைச்சர் சிவி கணேசன் ராமநாதபுரத்திற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு!

தமிழ்நாட்டில் 90 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் இருக்கின்றது. இதனை முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.

இதுவரைக்கும் 30 அரசு ஐடிஐ க்கள் ஆய்வு செய்து உள்ளது. இதில் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்கள், கட்டிட வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறோம். த

னியார் ஐடிஐகளில் மாணவர்கள் அதிகளவில் ஆர்வத்தோடு சேர்கிறார்களா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் தற்போது அரசு ஐடிஐகளில் 100 சதவீத மாணவர்கள் சேர்ந்து வருகின்றனர்.


கடந்த 10 ஆண்டுகளில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை எனறும் தமிழ்நாட்டில் மொத்தம் 25 ஆயிரம் மணவர்கள் மட்டுமே ஐடிஐயில் படிக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதனை ஐம்பதாயிரம் மணவர்களாக மாற்றுவதற்காகவே அனைத்து அரசு ஐடிஐகளை ஆய்வு நடத்தி முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று தேவையான அனைத்து வசதிகளையும் செய்து வருகிறோம்.

மேலும் அரசு அங்கீகாரம் பெறாமல் செயல்படும் தனியார் ஐடிஐ கள் மீது இந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.

அடுத்த செய்தி