ஆப்நகரம்

ஒமைக்ரான் அலெர்ட்... ராமேஸ்வரம் நுழைய புதிய ரூல்ஸ் அமல்!

ஒமைக்ரான் அச்சம் காரணமாக லாக்டவுன் போடலாமா என மத்திய அரசு ஆலோசனை நடத்தி வரும் சூழலில் ராமேஸ்வரத்திற்குள் நுழைய அதிரடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 6 Dec 2021, 5:18 pm
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு வரும் வெளிமாநில வாகனங்களை சோதனையிட்ட சுகாதாரத்துறையினர், தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்து உள்ளே அனுமதித்தனர்.
Samayam Tamil ஒமைக்ரான் அலெர்ட்... ராமேஸ்வரம் நுழைய புதிய ரூல்ஸ் அமல்!


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கோயிலுக்கு வெளிமாவட்ட மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கொரோனா தொற்று உருமாறி உலக நாடுகளை ஒமைக்ரான் என்ற புதிய வகை தொற்று பரவி அச்சுறுத்தி வருகின்றது.

தமிழ்நாடு மீணவர்கள் மீது பாட்டில் தாக்குதல்: சிங்கள இனவெறி கடற்படை அட்டூழியம்!
இதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் நகராட்சி பகுதிக்குள் வரும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநில வாகனங்களை சோதனை சாவடியில் மறித்து முழுமையாக சோதனையிட்ட பின்பே அவர்களை ஊருக்குள் நுழைய அனுமதிகின்றனர். குறிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்திய பின்னரே சம்பந்தப்பட்டவர்களை சுகாதார துறையினர் அனுமதித்து வருகின்றனர்.

தடுப்பூசி போடாமல் வரும் வெளிமாநிலத்தவர்களை ராமேஸ்வரம் நகர் பகுதிக்கு அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வைத்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி