ஆப்நகரம்

ஓபிஎஸ் பக்கம் வந்த அதிமுக; இபிஎஸ் தரப்பு அப்செட்... ராமநாதபுரம் ர.ரக்கள் குஷி!

அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் தர்மம் வென்றதாக கோசங்களுடன் கொண்டாடி வருகின்றனர்.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 17 Aug 2022, 4:16 pm

ஹைலைட்ஸ்:

  • அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது
  • ராமநாதபுரம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil ramanathapuram
சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடா்பாக ஓ.பன்னீா்செல்வம் மற்றும் அக்கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் வைரமுத்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்தது. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பளித்துள்ளார்.
அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே அதிமுகவின் தலைமை குறித்து நடைபெற்ற சட்டப் போராட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக செயல்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது.

அதன்படி, கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது, எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என்றும் ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் இணைந்தே பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு வெளிநாட்டு சுற்றுலா; நீங்க செய்ய வேண்டியது இதுதான்- அமைச்சர் அன்பில் மகேஷ் சூப்பர் தகவல்!

உயர் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து அதிமுக எம்.பி ஆர்.தர்மர் அறிவுறுத்தலுக்கிணங்க இராமநாதபுரம் நகர் பொறுப்பாளர் பாலசுப்ரமணியன் தலைமையில், முன்னாள் நகர் கழக செயலாளர் அங்குச்சாமி முன்னிலையில் அரண்மனை வாயிலிலும், இராமநாதபுரம் பாரதிநகர் பஸ்நிலையம் அருகே ஒன்றிய பொறுப்பாளர் வழக்கறிஞர் முத்துமுருகன் தலைமையில், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் ராஜேந்திரன், நாரல் ஊராட்சி செயலாளர் கே.சுரேஷ் ஆகியோர் முன்னிலையில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்று கூடி தர்மம் வென்றது என்ற கோசங்களுடன் உற்சாகமாக பட்டாசுகள் வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதில் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் மாரிமுத்து, திருப்புல்லாணி ஒன்றிய அவைத் தலைவர் உடையத்தேவன், திருப்புல்லாணி ஒன்றிய துணை செயலாளர் சரவணன், இராமநாதபுரம் ஒன்றிய நிர்வாகிகள் சுப்புத்தேவன்வலசை கிளை செயலாளர் திருமுருகன், மோகன், ஆர்.எஸ்மடை தகவல் தொழில்நுட்ப பிரிவு ஊராட்சி செயலாளர் த.பழனிச்சாமி, கம்பர் தெரு கிளைக் செயலாளர் கேசவன், ஆர்எஸ்மடை ரெத்தினசாமி, யுவராஜ், ஆனந்த பிரபு, கருப்பையா, பிரசாத் , நகர் வார்டு செயலாளர் கோவிந்தன், அறிவழகன், முனியசாமி, வாண்டையார், டாஸ்மாக் குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி