ஆப்நகரம்

திடீரென உள்வாங்கிய கடல் படகுகள் தரையில் தட்டிய படகுகள்: ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!

ராமேஸ்வரத்தில் 50 மீட்டர் தொலைவிற்கு உள்வாங்கிய கடல் நீர், அச்சத்தில் மீனவர்கள், தரை தட்டி நிற்கும் படகுகளால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 17 Oct 2021, 6:46 pm
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், தனுஷ்கோடி உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தைவிட காற்றின் வேகம் அதிகரித்து வரும்நிலையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.
Samayam Tamil திடீரென உள்வாங்கிய கடல் படகுகள் தரையில் தட்டிய படகுகள்: ராமேஸ்வரத்தில் அதிர்ச்சி!


இதையடுத்து ராமேஸ்வரம் பகுதியில் உள்ள மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், வழக்கத்தைவிட மன்னார்வளைகுடா, லட்சத்தீவு கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதனை அடுத்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மீனவர்கள் தங்களுடைய படகுகளை நங்கூரமிட்டு கடலில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்து இருந்தனர்.


இந்த சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் திடீரென 50 மீட்டர் தொலைவிற்கு கடல் உள்வாங்கியது. இதனால் மீனவர்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். இதற்கிடையே நங்கூரமிட்டு நிறுத்தி வைத்திருந்த நாட்டு படகுகள் அனைத்தும் தரை தட்டி நிற்கின்றது. இதனால் அப்பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடல் உள்வாங்கியதன் காரணமாக மீனவர்களிடையே அச்சம் காணப்படுகிறது.

அடுத்த செய்தி