ஆப்நகரம்

விஏஓவை தாக்கிய மணல் கடத்திய கும்பல்: ராமநாதபுரத்தில் வெடித்த போராட்டம்!

ராமநாதபுரம் மாவட்டம் கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய மணல் கடத்தும் கும்பலை கைது செய்யக் கோரி கிராம உதவியாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தியுள்ளனர்.

Samayam Tamil 1 Dec 2021, 6:43 pm
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மணல் கடத்தலை தடுக்கச் சென்ற கிராம நிர்வாக உதவியாளரை தாக்கிய மணல் கடத்தல் கும்பலை கைது செய்ய வலியிறுத்தி திருவாடானை தாலுகா அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம உதவியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil விஏஓவை தாக்கிய மணல் கடத்திய கும்பல்: ராமநாதபுரத்தில் வெடித்த போராட்டம்!


ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவிற்கு உட்பட்ட விருச்சுழி ஆற்றில் கடந்த 21 ஆம் தேதி மணல் திருட்டை தடுக்கச் சென்ற கட்டவிளாகம் கிராம உதவியாளர் சுரேஷ் தாக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கொலைவெறி தாக்குதல் நடத்திய மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தாக்குதல் நடத்திய மணல் திருட்டுக் கும்பலை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

பூஜ்ஜிய நேரத்தில் ராமநாதபுர எம்பி நவாஸ்கனி எழுப்பிய உரிமைக் குரல்!
மேலும் அவர்கள் குற்றவாளிகளை காவல்துறை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்தனர். மாநில பொருளாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக உதவியாளர்கள் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி