ஆப்நகரம்

ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் ரூ.90,000 இழந்த சிறுவனுக்கு நூதன தண்டனை!

சாயல்குடி அருகே ஃப்ரீ ஃபயர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.90,000 இழந்த சிறுவனுக்கு நூதன தண்டனை.

Samayam Tamil 19 Sep 2020, 2:12 pm

சாயல்குடி அருகே ஆன்லைனில் ஃப்ரீ ஃபயர் விளையாட்டில் 90 ஆயிரம் ரூபாயை இழந்த சிறுவனுக்கு அவனது பெற்றோர் நூதன தண்டனை வழங்கியுள்ளனர்.
Samayam Tamil Free fire




ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலக்கிடாரம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் ஹிருத்திக் ரோஷன் கடலாடி தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயின்று வருகிறான்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும்போது, பொழுதுபோக்கிற்காக மொபைலில் ஃப்ரீ ஃபயர் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளான். மேலும் சிறுவனின் தாயார் ஒரு சில சமயங்களில் அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களில் வீட்டுக்கு தேவையான ஒரு சில பொருட்களை வாங்க தனது வங்கியின் ஏடிஎம் கார்டை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கணக்கு வைத்திருக்கும் ராமநாதபுரம் வங்கி கிளைக்கு சென்று பணம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரது வங்கி கணக்கில் பணம் இல்லை என தெரியவந்துள்ளது .

உடனடியாக வங்கி மேலாளரிடம் கேட்டபோது அவரது கணக்கை ஆய்வு செய்த வங்கி மேலாளர், ஆன்லைன் விளையாட்டு மூலம் தினமும் ரூ300, ரூ.500, ரூ.1000 என வங்கிக் கணக்கிலிருந்து எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கீழடி எப்படி அழிந்தது? இன்று முதல் ஆய்வுகள் தொடக்கம்

ஊருக்கு வந்த அவரது தாயார் தனது கணவர் செந்திலிடம் நடந்த சம்பவங்களை கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து இருவரும் சிறுவனிடம் விசாரித்துள்ளனர் அச்சிறுவன் ஆன்லைனில் ஃப்ரீ பயர் என்ற விளையாட்டை தான் விளையாண்டதை ஒப்புக்கொண்டுள்ளான்.

மேலும் செய்வதறியாது திகைத்த பெற்றோர், சிறுவனை அழைத்து நூதன தண்டனை வழங்கும் விதமாக தாங்கள் இழந்த ரூபாய் 90 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக 1, 2, 3 என 90,000 வரை நோட்டில் எழுதச்சொல்லி வலியுறுத்தியுள்ளனர்.

சிறுவனும் 1, 2, 3 என 3,000 வரை எழுதியபின் கை வலிப்பதாக கூறியதால் பரிதாபமடைந்த பெற்றோர் அவனை நிறுத்தச் சொல்லினர்.

அடுத்த செய்தி