ஆப்நகரம்

ஸ்கூல் மாணவர்கள் மதுரை டூ அப்துல் கலாம் நினைவகம் வரை சைக்கில் பயணம்!

மதுரை டூ அப்துல் கலாம் நினைவு கட்டிடம் வரை சைக்கிலில் சென்ற மாணவர்கள், இதேபோல் அனைவரும் உடலை பாதுகாக்க முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 31 Dec 2021, 9:59 pm
இணையவழிக் கல்வி மூலமாக வீட்டிலிருந்து பயின்று வந்த மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற்றி, அவர்களது மனதையும் உடலையும் புத்துணர்ச்சி அடையச் செய்ய மதுரையில் இருந்து அப்துல் கலாம் நினைவகம் வரை பள்ளி மாணவர்கள் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
Samayam Tamil ஸ்கூல் மாணவர்கள் மதுரை டூ அப்துல் கலாம் நினைவகம் வரை சைக்கில் பயணம்!


மதுரை தனியார் வல்லபா வித்யாலயா சிபிஎஸ்சி மேல்நிலைப்பள்ளி பதினோராம் வகுப்பு மாணவர்கள் 19 பேரும், மாணவியர் 6 பேரும், மற்றும் 8 ஆசிரியர்களுடன் இணையத்திலிருந்து, இயற்கைக்கு என்ற தலைப்பில் சைக்கிள் பயணமாக நேற்று காலை மதுரையிலிருந்து புறப்பட்டு, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்தை அடுத்த பேக்கரும்பில் உள்ள அப்துல் கலாம் அவர்களின் நினைவகம் வரை, மாணவ, மாணவிகள் சைக்கிளில் 36 மணி நேரம் சைக்கிள் பயணம் செய்து வந்தனர்.

இந்தப் பயணத்தின் நோக்கம் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இணையவழிக் கல்வி மூலமாக வீட்டிலிருந்தே பயின்று வந்த மாணவர்களை இயற்கை சூழலுக்கு மாற்றி அவர்களது மனதையும், உடலையும், புத்துணர்ச்சி அடையச் செய்வதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை...
மேலும் இந்த சைக்கிள் பயணம் அவர்கள் மன அழுத்தம் குறைத்து, கல்வியில் கவனம் செலுத்த உந்துகோலாய் இருக்கும் எனவும் தெரிவித்தனர்.

அனைத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் இதேபோல் இயற்கை சம்பந்தப்பட்ட விளையாட்டு உள்ளிட்டவைகளில் கவனம் செலுத்தி உடலையும், மனதையும் புத்துணர்ச்சி அடையச் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

அடுத்த செய்தி