ஆப்நகரம்

ராமநாதபுரம் வினாத்தாள் லீக் - மூவர் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 6,7,8-ம் வகுப்புக்கான முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வெளியானது. அது தொடர்பாக மூன்று ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

Samayam Tamil 29 Sep 2022, 9:27 pm

ஹைலைட்ஸ்:

  • ராமநாதபுரத்தில் அறிவியல் வினாத்தாள் வெளியீடு
  • தேர்வுக்கு முந்தைய நாள் வெளியிட்ட ஆசிரியர்கள்
  • தலைமை ஆசிரியர் உட்பட மூவர் பணியிடை நீக்கம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Ramanathapuram question paper leak
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே அ.மணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 6ம்,7ம் மற்றும் 8ம் வகுப்புகளுக்கான அறிவியல் பாடத்தில் முதல் பருவ தொகுத்தறி மதிப்பீட்டு தேர்வு நேற்று நடைபெற இருந்தது. ஆனால் அதற்கான வினாத்தாள் நேற்று முன்தினமே அந்தந்த வகுப்புகளில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
தேர்வுக்கு முந்தைய நாளே அறிவியல் வினாத்தாள் வெளியானது குறித்து ஆசிரியர் குழுக்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவியது. அதனால் முதன்மை கல்வி அலுவலர் பாலமுத்து மாவட்ட கல்வி அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் பள்ளியின் தலைமையாசிரியர் வினாத்தாளை அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியரிடம் வழங்கியுள்ளார்.

அறிவியல் ஆசிரியர் வினாத்தாளை தேர்வுக்கு முதல்நாளே மாணவர்களிடம் வழங்கி படித்து வரச்சொல்லியுள்ளார். அந்த வினாத்தாளை பட்டதாரி கணித ஆசிரியர் படம் பிடித்து வெளியிட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

அதனையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் பாலாஜி, வினாத்தாள் வெளியாக காரணமாக இருந்த தலைமையாசிரியர் எம்.மீனாம்பர், கணித ஆசிரியர் வி.டி.குமார்வேல், அறிவியல் ஆசிரியர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோரை, பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

அடுத்த செய்தி