ஆப்நகரம்

கலெக்டர் போட்ட உத்தரவு; பள்ளிக்கூடத்தில் பரபரப்பு!

தனியார் பள்ளிக்கு திடீரென வருகை தந்த மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். இதை சற்றும் எதிர்பாராத மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

Samayam Tamil 2 Nov 2021, 8:36 pm
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. கடந்த 19 மாதங்களாக வீடுகளில் அடைந்து கிடந்த ஏராளமான மாணவ, மாணவிகள் நேற்று பள்ளிகளுக்கு உற்சாகமாக வந்தனர்.
Samayam Tamil பள்ளி வாகனங்கள் ஆய்வு
பள்ளி வாகனங்கள் ஆய்வு


இந்த நிலையில் திடீரென ராமநாதபுரத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் அனைத்தையும் கள ஆய்வு செய்யும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் முகம்மது சதக் தஸ்தஹீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த ஆய்வின்போது கலெக்டர் பிறப்பித்த உத்தரவு:

பள்ளி வாகனம் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டுக்கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். வாகனத்தின் வேகம் நகரத்தில் 40 கி.மீ, என்ற அளவிலும் வாகனத்தை இயக்க வேண்டும்.

வாகனத்தின் ஒட்டுநர் உரிமம் பெற்று போக்குவரத்து வாகனம் ஓட்டுவதற்கு குறைந்தபட்சம் 5 வருடங்கள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நடத்துனரின் வயது 21 முதல் 50 வரை இருக்க வேண்டும்.

பெருமாள் கோயிலில் கூடுங்கள்; பள்ளி மாணவர்களுக்கு உத்தரவு!

வாகனத்தில் எதிர்பாராத நிகழ்வின்போது ஏற்படும் விபத்தினை தவிர்க்க அவசர வழி, இரண்டு தீயணைப்பாண் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். முதலுதவி பெட்டியில் உரிய மருத்துவப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.


படித்தளம் தரையில் இருந்நு 25 செ.மீ முதல் 30 செ.மீ வரை இருக்க வேண்டும். நடப்பில் உள்ள தகுதிச்சான்று, காப்புச்சான்று, புகைச்சான்று மற்றும் அனுமதிச்சான்று வைத்திருக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார். மேலும் இந்த உத்தரவு முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை மாவட்ட கலெக்டரே ஆய்வு மேற்கொண்டார்.

டீச்சரு ஆட...நான் ஆட... ஒரே ஹேப்பி; மாணவிகளின் முதல் நாள் அனுபவம்!

இவ்வாறாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 700 வாகனங்களை வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்துத்துறை சார்ந்த அலுவலர்களுடன் சேர்ந்து கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வின்போது, வட்டார போக்குவரத்து அலுவலர் சேக் முகம்மது, இராமநாதபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில் குமார், பரமக்குடி ராஜ்குமார் ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி