ஆப்நகரம்

விடுதலை பெற்றும் வந்தது சிக்கல்; 43 இந்திய மீனவர் குடும்பம் சோகம்!

தமிழக மீனவர்கள் 43 பேரை இலங்கை கோர்ட் விடுதலை செய்துள்ள போதிலும் அவர்கள் நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவ கிராமங்களில் சோகமான சூழல் நிலவுகிறது.

Samayam Tamil 1 Feb 2022, 10:33 am
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 18ம் தேதி 3 விசை படகுகளில் 43 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது கடல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஊர்காவல் துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம்
இலங்கை ஊர்காவல் துறை நீதிமன்றம்



இந்நிலையில் ஒரு மாதத்திற்கும் மேலாக இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 43 பேரையும், கடந்த 27ம் தேதி இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.

டிஜிபி சைலேந்திர பாபு டென்ஷன்; போலீசுக்கு பறந்தது திடீர் உத்தரவு!

இவர்கள் 43 பேரும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் 43 பேரையும் விமானம் மூலம் தமிழகத்துக்கு அனுப்பும் பணி நடந்தது.

இதனை தொடார்ந்து 43 மீனவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் மீனவர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆடிப்போய் கிடக்கும் அதிமுக; பீதி கிளப்பிய டெல்லி உத்தரவு!

இதையடுத்து உடனடியாக 43 மீனவர்களும், இலங்கை கிளிநொச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து மீனவர்கள் அனைவரும் குணமடைந்த பிறகு விமானம் மூலம் தமிழகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அவர்கள் இந்திய திரும்புவது தாமதமாகி உள்ளது.

அடுத்த செய்தி