ஆப்நகரம்

கள்ளத்தோணியில் சமையல் மஞ்சள் கடத்தல்... முன்று பேர் கைது!!

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கள்ளத்தோணியில் கடத்தப்படவிருந்த 1,000 கிலோ சமையல் மஞ்சளை கடலோர போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Samayam Tamil 12 Sep 2020, 7:58 pm
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து மிளகு, மஞ்சள் உள்ளிட்ட சமையல் பொருள்கள் இலங்கைக்கு கடத்தப்படவுள்ளதாக, ராமேஸ்வரம் கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
Samayam Tamil sumggling


இதனையடுத்து, கடலோர காவல்படை போலீஸார் வேதாளை கடற்கரைக்கு விரைந்தனர். அப்போது அங்கு குஞ்சார்வலசை பகுதியில் இருந்து வேதாளை நோக்கி கடற்கரை வழியாக சரக்கு வாகனம் ஒன்று வந்துக் கொண்டிருந்தது.

வாகனத்தை நிறுத்திய போலீசார், அதனை சோதனை செய்ததில் 30 க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சுமார் 1,000 கிலோ சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

சட்டமெல்லாம் நெக்ஸ்ட்... சரக்குதான் ஃபர்ஸ்ட்... சூடு பறக்கும் கள்ள மது விற்பனை

இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, வாகன ஓட்டுநர் லோக வெங்கடேஷ் மற்றும் வேதாளை பகுதியை சேர்ந்த ரியாஸ், சகிபுல்ல ஆகியோரை கைது செய்த போலீசார் மூட்டைகளில் இருந்த ஆயிரம் கிலோ மஞ்சளையும் பறிமுதல் செய்தனர்.

அடுத்த செய்தி