ஆப்நகரம்

நபார்டு வங்கி நிதி உதவியுடன் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாஸ்டாம்ஸ் தொண்டு நிறுவனம் நபார்டு வங்கி இனணந்து பருவ காலநிலை மாற்றத்திற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

Samayam Tamil 25 Jan 2022, 7:52 pm

ஹைலைட்ஸ்:

  • ராமநாதபுரத்தில் மகளிர் விழிப்புணர்வு சமூக நல வளர்ச்சி முகாம்
  • நபார்டு வங்கி நிதி உதவியுடன் பெண்களுக்கு பயிற்சி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே சுக்குராவரம் கிராமத்தில் மகளிர் விழிப்புணர்வு சமூக நல வளர்ச்சி,வாஸ்டாம்ஸ் தொண்டு நிறுவனம் மற்றும் நபார்டு வங்கி இனணந்து பருவ காலநிலை மாற்றத்திற்க்கான தொடக்க விழா நடைபெற்றது.
இதில் திருவாடானை பகுதி மக்கள் விவசாயம்சார்ந்த தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். விவசாய காலம் முடிந்து மற்ற நாட்களில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் பல திட்டங்களை இம்முகாமில்எடுத்துரைத்தனர்.

பருவ காலநிலை மாற்றத்திற்கான திட்ட பணிகளாக குழி ஏற்படுத்தல், வரப்பு அமைத்தல், பண்ணைக்குட்டை அமைத்தல், பண்ணைக்குட்டை நீர் உள்வரத்து அமைத்தல், பயிறு விதைப்பு, பழ மரக்கன்றுகள் வழங்குதல், சொட்டுநீர் பாசனம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, ஒளி ஒலி, அச்சு ஆவணங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு நபார்டு வங்கி நிதி உதவியுடன் பயிற்சி அளித்து வருகிறது.
முன்னாள் அதிமுக எம்பிக்கு கொரோனா பாதிப்பு!
இதன் தொடர்ச்சியாகபயனாளிகள் 140 பேருக்கு கோழி வளர்ப்பு செய்ய கோழி குஞ்சுகள், மற்றும் அஞ்சு கோட்டை நீர் செறிவு பகுதி சுயஉதவி குழுக்களுக்கு சுழற்சி நிதியும் வழங்கப்பட்டது.

இந்த தொடக்கவிழாவிற்கு இராமநாதபுரம் தொடக்க வேளாண்மை இணை இயக்குநர் முனைவர் டாம்பி சைலஸ், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அருண்குமார், தமிழ்நாடு கிராம வங்கி மண்டல மேலாளர் தூத்துக்குடி கண்ணன், அஞ்சுகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பூபாலன், மகளிர் விழிப்புணர்வு சமூகநல வளர்ச்சி பல்நோக்கு சேவை சங்கம், வாஸ்டாம்ஸ் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் ஜெகநாதன் உட்பட கிராம மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி