ஆப்நகரம்

வீட்டை தரைமட்டமாக்கிய கும்பல்; விவசாயி கண்ணீர்!

பொக்லைன் மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் விவசாயி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

Samayam Tamil 20 Apr 2021, 9:14 am
சேலம் மாவட்டம் வாழப்பாடி துக்கியாம்பாளையம் காக்கச்சி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செல்வம். இவரது மனைவி செல்வமணி. இவர்கள் காக்காச்சிபாளையம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரிடம் 27 சென்ட் நிலம் வாங்கி சோளம் பயிரிட்டு இருந்தனர். மேலும் அந்த இடத்தில் 30,000 ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் ஷீட்டுகள் மூலம் வீடு கட்டி தங்கி விவசாய பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
Samayam Tamil பாதிக்கப்பட்ட விவசாயி புகார் மனுவை காட்டி முறையிடுகிறார்.
வீட்டை இடித்து தரைமட்டமாக்கி விட்டதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.


இந்த நம்பர் உறுதி: எடப்பாடியை நம்ப வைத்த மூன்று ரிப்போர்ட்!

இந்நிலையில் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கும், செல்வத்துக்கும் இடையே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவர்கள் அடிக்கடி வாய்த்தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 18.1.2020 அன்று இரவு சுமார் 8 மணி அளவில் ஜெயராமன் மற்றும் அவரது மகன் நந்தகுமார், மருமகன் ராஜராஜன் ரகு ராஜா, ரவி மற்றும் பொக்லைன் இயந்திரம் வைத்துள்ள வெங்கடேஷ் ஆகியோர் பொக்லைன் இயந்திரத்துடன் செல்வத்தின் தோட்டத்திற்கு வந்துள்ளனர்.

கோயில் பூசாரி வெட்டி படுகொலை.... சீவலப்பேரி பதற்றம்

பின்னர், செல்வதை தரம் தாழ்ந்து வார்த்தைகளால் திட்டியதுடன் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சுமார் முப்பதாயிரம் ரூபாய் மதிப்புள்ள வீட்டை இடித்து தள்ளி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் அங்கிருந்து தப்பி ஓடி வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஆனால் தற்போது வரை போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த புகார் தொடர்பாக வாழப்பாடி காவல் நிலையத்தை அணுகும் போதெல்லாம், இந்த பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று பஞ்சாயத்து செய்து செய்வதாகவும் செல்வம் குற்றம்சாட்டி உள்ளார்.

கள்ளழகர் வைகையில் இறங்கும் வைபவம்... கைவிரித்த கோர்ட்!

இந்நிலையில் செல்வம், தனது பிரச்சினை தொடர்பாக மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி