ஆப்நகரம்

எடப்பாடியார் துரோகங்கள் பாகம் 2.. விரைவில் வெளியிடப்படும்.. புகழேந்தி பரபரப்பு பேட்டி!

அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும் என புகழேந்தி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Sep 2022, 6:05 pm

ஹைலைட்ஸ்:

  • கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்களே இந்த எடப்பாடி பழனிசாமியை யாரும் வரவேற்கவில்லை
  • எடப்பாடி பழனிசாமி குறித்து இன்னும் பல ரகசியங்கள் உள்ளது
  • அம்மா அவர்கள் சிறையில் இருந்தபொழுது என்னென்ன துரோக வேலைகள் செய்தார்கள் என்பது குறித்த பாகம் 2 விரைவில் வெளியாகும் என புகழேந்தி பேட்டி
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புகழேந்தி
சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக நிர்வாகி புகழேந்தி கூறுகையில், "அதிமுகவில் உள்ள மூத்த நிர்வாகிகள் செங்கோட்டையன், செம்மலை போன்ற அண்ணன்கள் இந்த முட்டாள் எடப்பாடி பழனிசாமி பின்னால் நின்று எப்படி வேடிக்கை பார்க்கிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை. செங்கோட்டையன் வேறு தற்பொழுது ஜாதி பற்றிப் பேச ஆரம்பித்துள்ளார். சுதந்திரப் போராட்ட தியாகி சின்னமலை வழி வந்த பிள்ளைகள் எடப்பாடி பழனிசாமியை காரி துப்புகிறார்கள். மேலும் யாரும் உன்னை வரவேற்கவில்லை. அப்படி உன்னை வரவேற்றால் அவன் கொங்கு சமுதாயத்தை சேர்ந்தவனாக இருக்க முடியாது. ஜாதி பெயரை சொல்லி அரசியல் செய்கிறீர்களா? எம்ஜிஆர் அவர்களும், மறைந்த அம்மா அவர்களும் என்றைக்காவது ஜாதியை பற்றி பேசி உள்ளார்களா?.

எடப்பாடி பழனிசாமியின் பின்புறமாக யார் யார் உள்ளார்கள் என்பதும், யார் சொல்லி இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பது வெளியில் வரும். அவரைப் பற்றிய பல ரகசியம் உள்ளது மாண்புமிகு அம்மா அவர்கள் சிறையில் இருந்த போது என்னென்ன துரோக செயல்கள் செய்தீர்கள் என்று அனைத்து உண்மைகளையும் பகுதி இரண்டாக வெளியிடுவேன் என்றார். எடப்பாடி பழனிசாமிக்கு தைரியம் இருந்தால் தற்பொழுது உள்ள எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து விட்டு எடப்பாடி தொகுதியில் மீண்டும் போட்டியிட தயாரா?. நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன் யார் ஜெயிப்போம் என்று பிறகு தெரியும் என்றார்.

தங்கத்தில் பரிசளித்த கனிமொழி எம்பி; நெகிழ்ச்சியில் அமைச்சர் குடும்பம்!

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி என்று அழைக்கப்படும் இந்த பழனிசாமியை எதிரியாக கருதி, அரசியல் ரீதியாக அவரை இன்று முதல் தீய சக்தி பழனிசாமி என்று அழைக்கப்படுவார் என்று புதிய பட்டத்தை வெளியிட்டு, அதற்கான துண்டு பிரசுரத்தையும் வெளியிட்டார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி