ஆப்நகரம்

முக கவசம் அணியாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் மூக்கை உடைத்த போலீஸ்: சேலத்தில் அராஜகம்!

போலீசார் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Samayam Tamil 12 May 2021, 6:58 pm
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருபவர் ஹரிஷ். இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.
Samayam Tamil முக கவசம் அணியாததால் ஆம்புலன்ஸ் டிரைவர் மூக்கை உடைத்த போலீஸ்: சேலத்தில் அராஜகம்!


அப்போது அவர் முககவசம் அணியாமல் இருந்துள்ளார். இதை அரசு மருத்துவமனை வளாகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் சேர்ந்த தலைமைக் காவலர் சந்திரன் கவனித்துள்ளார்.

இதையடுத்து ஆம்புலன்ஸ் டிரைவரிடம் முக கவசத்தை அணியும்படி அறிவுரை வழங்கியுள்ளார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவர் போதையிலிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே வாக்குவாதத்தின்போது ஆம்புலன் டிரைவர் போலீசை அநாகரிகமாக பேசியுள்ளார். அதை பொறுத்துக் கொள்ள முடியாத போலீஸ், அங்கிருந்த குச்சி ஒன்றை எடுத்து ஹரிஷை தாக்கியுள்ளார். இதனால் ஆம்புலன்ஸ் டிரைவரின் மூக்கு பகுதி காயமடைந்துள்ளது.

சேலத்தில் டாஸ்மாக் பிராந்தி, பீர் விற்பனை காலை முதலே படுதூள்!
தொடர்ந்து ஆம்புலன்ஸ் டிரைவரை போலீசார் விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த வேளையில் ரத்தம் சொட்டச் சொட்ட ஆம்புலன்ஸ் டிரைவர் ஹரிஷ் முக கவசம் அணியாததால் காவலர் தன்னை கடுமையாகத் தாக்கியதாகக் கூறி சமூக வலைதளங்களில் தனது வீடியோவை பதிவிட்டுள்ளார்.

ரத்தம் சொட்ட சொட்ட இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட செவ்வாப்பேட்டை போலீசார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் குடிபோதையிலிருந்ததால் போலீஸ்காரர் கடுமையாக நடந்து கொண்டதாகவும் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடிபோதையிலிருந்ததை உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி