ஆப்நகரம்

பூட்டிக் கிடந்த கம்பெனியில் செம்பு திருடிய திருடர்கள்

திருடப்பட்ட காப்பர் பொருட்கள் அனைத்தையும் லாரியில் எடுத்துகொண்டு ஒரு காவலரை மட்டும் கேட்டிற்கு வெளியே அடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர்.

Samayam Tamil 9 Nov 2020, 3:15 pm
ஓமலூர் அருகே தனியார் இரும்பு தொழிற்சாலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்பு திருட்டு. இந்த கொள்ளை சம்பவம் குறித்து சம்பவ இடத்தில் கருப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil இரும்பு ஆலை


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கோட்டகவுண்டம்பட்டியில் ஹைடெக் என்ற பெயரில் தனியாருக்கு சொந்தமான இரும்பு தொழிற்சாலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிலையில் தற்போது செயல்படாமல் உள்ளது. மேலும் நிர்வாக பிரச்சினை காரணமாக நஷ்டமடைந்ததால் கடந்த ஏழு ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கிறது. இந்நிறுவனத்தின் தளவாடங்கள் அனைத்தும் மக்கி சேதமடைந்துள்ள நிலையில் வங்கி கடனுக்காக வங்கியின் கட்டுப்பாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாக உள்ளது.

சுமார் 70ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தொழிற்ச்சாலைக்கு இரவு, பகல் என 22 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்தநிலையில் நேற்று இரவு லாரியில் வந்த 20பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து காவலாளிகள் அனைவரையும் தனி அறையில் அடைத்துள்ளனர்.

தொடர்ந்து உள்ளே நுழைந்த கொள்ளை கும்பல் தொழிற்சாலையில் உள்ள மின் சாதன பேட்டிகள், மின் மாற்றிகள், மின் களன்கள், டிரான்ஸ்பார்மர்கள் உள்ளிட்ட மின் சாதனங்களில் உள்ள பலகோடி மதிப்பிலான காப்பர் கம்பிகளை பிளேட்டுகளை மட்டும் திருடியுள்ளனர்.

திமுக ஜாதகம் ஐ பேக் கையில்: ஆபத்தை உணர்வாரா ஸ்டாலின்?

பின்னர் திருடப்பட்ட காப்பர் பொருட்கள் அனைத்தையும் லாரியில் எடுத்துகொண்டு ஒரு காவலரை மட்டும் கேட்டிற்கு வெளியே அடித்து பள்ளத்தில் தள்ளிவிட்டு சென்றுள்ளனர். தொடர்ந்து காலையில் அக்கம்பக்கத்தினர் பார்த்து ஓமலூர் மற்றும் கருப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

அங்கிருந்து வந்த போலீசார் நிறுவனத்துக்குள் சென்று அடைக்கப்பட்டிருந்த காவலர்களை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் தனியார் கம்பெனிக்கு சொந்தமான பொருட்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தமிழக கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த செய்தி