ஆப்நகரம்

எடப்பாடி கோட்டையில் வேட்டு... பதறி போன சேலம்... ஓடிவந்த போலீஸ்!

அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Jun 2022, 6:47 am
அதிமுகவில் உச்சபட்ச பதவிக்கு எடப்பாடி பழனிசாமி தான் வர வேண்டும் என்று பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் கூறிவிட்டனர். இன்று (ஜூன் 23) நடைபெறவுள்ள அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமைக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
Samayam Tamil bomb threat to salem junction railway station for o panneerselvam to aiadmk single leadership
எடப்பாடி கோட்டையில் வேட்டு... பதறி போன சேலம்... ஓடிவந்த போலீஸ்!


நீதிமன்றத்தில் வழக்கு

இந்த சூழலில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் கதவுகளை ஓ.பன்னீர்செல்வம் தட்டினார். அதில், பொதுக்குழுவிற்கு தடை விதிக்க முடியாது என்றும், 23 தீர்மானங்களை தவிர வேறு புதிய தீர்மானங்கள் குறித்து முடிவு எடுக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒற்றை தலைமை ஓபிஎஸ்

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவின் தலைமை பொறுப்பை வழங்க வேண்டும் என்றும், இல்லையெனில் சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு வைப்பேன் என்றும் வினோத் என்ற நபர் நேற்று காலை சென்னை காவல்துறை தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இந்த தகவல் சேலம் மாநகர நுண்ணறிவு பிரிவிற்கும், சூரமங்கலம் காவல் நிலையத்திற்கும் தெரிவிக்கப்பட்டது.


எடப்பாடிக்கு சனி பகவான் கொடுக்கும் ஜாக்பாட்... ஜோதிடர் குறிச்ச நல்ல நேரம் இதோ!

3

உடனே சேலம் மாநகர போலீசார் உஷாராகினர். இதையடுத்து சேலம் ரயில்வே காவல் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் விசாரணை மேற்கொண்டனர். சேலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. ரயில் பயணிகள் அமரும் இடம், சரக்கு பெட்டிகள் இருக்கும் இடங்களில் மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

எடப்பாடி கோட்டை

மிரட்டல் விடுத்த நபரின் விவரங்கள் குறித்து ஆராயப்பட்டது. அதில் அவர் தாம்பரத்தில் இருந்து தொலைபேசியில் பேசியது கண்டறியப்பட்டது. அவரை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தை எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டம் என்பதால், கடந்த அதிமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்களை வாரி வழங்கினார்.

சர்ச்சை போஸ்டர்கள்

இதனால் கட்சிக்குள் மட்டுமின்றி பொதுமக்கள் மத்தியிலும் பெரிய ஆதரவு வட்டம் உருவானதாக சொல்லப்பட்டது. தற்போது ஒற்றை தலைமைக்கான முழக்கம் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், சேலம் மாவட்ட அதிமுகவினர் எடப்பாடிக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகின்றனர். அதேசமயம் சேலத்தில் ஒட்டப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவான போஸ்டர்களால் சலசலப்பு ஏற்பட்டது.


அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சேலத்தில் பலே வியூகம்

அதிருப்தியாளர்கள் சிலர் செய்த வேலையாக இருக்கலாம் என்று சொல்லப்பட்டது. இருப்பினும் முக்கிய நிர்வாகிகள் யாரும் அவருக்கு எதிராக செயல்படவில்லை என்கின்றனர் சேலம் அதிமுகவை சேர்ந்த ரத்தத்தின் ரத்தங்கள். ஒருசில அதிருப்தி கோஷ்டிகளையும் தன்வசமாக்கி விட்டார். விரைவில் அதிமுகவின் ஒற்றை தலைமைக்கான பீடத்தை அலங்கரிப்பார் எடப்பாடி என்று கூறுகின்றனர்.

அடுத்த செய்தி