ஆப்நகரம்

சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா?

ஆத்தூர் அருகே நாசிங்கபுரம் தேசிய நெடுஞ்சாலையில் தோண்டிய பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி , 15 நாட்களாகியும் நகராட்சி நிர்வாகம் சாலையைச் சீரமைக்காததால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

Samayam Tamil 4 May 2021, 9:42 pm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நரசிங்கபுரம் நகராட்சிக்கு எதிரே உள்ள சேலம்-சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு டெலிபோன் கேபிள் அமைப்பதற்காகக் குழி தோண்டப்பட்டது.
Samayam Tamil சேலம்-சென்னை சாலையில் 6 மாதமாக பள்ளம்: அதிகாரிகள் கண்ணில் பட்டதே இல்லையா?


டெலிபோன் கேபிள் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. ஆனால் அந்தச் சாலை சீரமைக்கப்படவில்லை. முறையாகக்கூடச் சீற் செய்யவில்லை.

இந்த சூழலில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் மீண்டும் பள்ளம் ஏற்பட்டது. இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தரக்கோரி நரசிங்கபுரம் நகராட்சி நிர்வாகத்திடம் பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர். எனினும் சாலை சீரமைக்கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி வெற்றிச் சான்றிதழில் பிரச்சினை: 3 வருடத்திற்கு முன்பே வெற்றி என அறிவிப்பு!

இதனால் பள்ளம் ஏற்பட்ட இடத்தில் தடுப்புகளையும், கற்களையும் பகுதி மக்களே வைத்துள்ளனர். அவ்வப்போது வாகன ஓட்டிகள் பெரும் விபத்திற்குள்ளாகும் சூழல் உருவாகிறது.

இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துச் சேதமடைந்த சாலையைச் சீரமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த செய்தி