ஆப்நகரம்

கொரோனா 2ஆம் அலை: சேலத்தில் அதிரடி கட்டுப்பாடு, மக்கள் அதிர்ச்சி!

கொரோனா 2ஆவது அலையைக் கட்டுப்படுத்த அரசு அறிவித்த உத்தரவைத் தொடர்ந்து நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை கடைப்பிடிக்க வேண்டும் சேலத்தில் பல்வேறு இடங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 19 Apr 2021, 4:12 pm
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன்மலை தொடர்ச்சியில் முட்டல் ஏரி, நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இதை வனத்துறையினர் சுற்றுலாத் தலமாகப் பராமரித்து வருகின்றனர்.
Samayam Tamil கொரோனா 2ஆம் அலை: சேலத்தில் அதிரடி கட்டுப்பாடு, மக்கள் அதிர்ச்சி!


இங்குச் சுற்றுலாப் பயணிகள் குளிக்கும் வசதி, வனப்பகுதியில் பொழுது போக்கும் வகையில் குடில், பூங்கா, மற்றும் சிறுவர்கள் விளையாட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில் ஆத்தூர் மட்டுமின்றி பெரம்பலூர், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள்.

இந்த சூழலில் இப்போது தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை பரவலைத் தடுக்கும் வகையில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தில் தாரை தப்பட்டையுடன் கரகாட்டம்

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் அனைத்து சுற்றுலா தளங்கள் கடற்கரை பூங்காக்களுக்குப் பொதுமக்கள் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

இதன்படி நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை ஆணைவாரி சுற்றுலா மையம் மூடப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீர்வீழ்ச்சிக்குச் செல்லவும் படகு சவாரி செய்யவும் சுற்றுலாப் பயணிகள் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

அடுத்த செய்தி