ஆப்நகரம்

என்ன நடக்குது சேலத்தில் 24 மணி நேரத்தில் 18பேர் சாவு: திணறும் அரசு!

சேலம் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்டுள்ளது கொரோனா பலி எண்ணிக்கை. போதுமான படுக்கை வசதிகள் இல்லாத சுழலலால் மருத்துவமனை வாசலிலே மக்கள் உயிரிழக்கின்றனர்...

Samayam Tamil 12 May 2021, 7:50 pm
சேலம் மாவட்டத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 475 ஆக அதிகரித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தினந்தோறும் 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil என்ன நடக்குது சேலத்தில் 24 மணி நேரத்தில் 18பேர் சாவு: திணறும் அரசு!


மாவட்டத்தில் இதுவரை 47 ஆயிரத்து 929 பேர் பாதிக்கப்பட்டு 43 ஆயிரத்து 832 பேர் சிகிச்சை பெற்றுக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3 ஆயிரத்து 475 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை சேலம் மாவட்டத்தில் 622 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சித் தரும் விஷயமாக உள்ளது . இந்த சூழலில் கொரானா பாதிப்பு காரணமாக நேற்று மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

சேலத்தில் டாஸ்மாக் பிராந்தி, பீர் விற்பனை காலை முதலே படுதூள்!

மாவட்டத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. சேலம் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே ஆக்சிஜன் வசதி இல்லாததாலும் படுக்கை வசதிகள் கிடைக்காததாலும் ஆம்புலன்சில் இருந்த படியே நோயாளிகள் உயிரிழப்பது தொடர் கதையாகிவிட்டது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆக்சிஜன் கூடிய படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொத்துக் கொத்தாக அதிகரிக்கும் நோயாளிகளும் உயிரிழப்புகளும் சேலம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி