ஆப்நகரம்

சேலம் மாவட்டத்தில் ஆண்களை முந்திய பெண்கள்... எதில் தெரியுமா?

சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டார். இந்த மாவட்டத்தில் மொத்தம் 30 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Samayam Tamil 20 Jan 2021, 1:16 pm
தமிழகம் முழுவதும் 2021 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
Samayam Tamil சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்
இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன்


அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்சித் தலைவர் ராமன் வெளியிட்டார்.

இதில் 14 லட்சத்து 95 ஆயிரத்து 165 ஆண் வாக்காளர்களும், 15 லட்சத்து 8 ஆயிரத்து 771 பெண் வாக்காளர்கள், 204 இதர வாக்காளர்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் 18 வயது நிரம்பிய 46 ஆயிரத்து 391 புதிய இளம் வாக்காளர்களும் இதில் இடம்பெற்றுள்ளனர்.

Dmk Salem: சசிகலா ரிலீசானதும் எடப்பாடியின் ஆட்டம் க்ளோஸ்... முதல்வர் தொகுதியில் ஸ்டாலின் 'தில்' பேச்சு!

கடந்த நவம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 99 ஆயிரத்து 840 வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டும், 57 ஆயிரத்து 868 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கமும் செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் மொத்தமாக 30 லட்சத்து 4 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

செய்தியாளர்கள் வெளியேற்றம்: இதனிடையே, வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட உடன் செய்தியாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்.

முதல்வரின் சொந்த மாவட்டம்னா சும்மாவா? - சென்னைக்கு டஃப் கொடுக்கும் சேலம்!

அரசியல் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள், புகார்கள் ஊடகங்களில் வெளியாவதை தவிர்க்கவே மாவட்ட ஆட்சியர் இந்த நடவடிக்கை மேற்கொண்டதாக அரசியல் கட்சி பிரமுகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

அடுத்த செய்தி