ஆப்நகரம்

Mixopathy: 3ஆவது நாளாக 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உண்ணாவிரதம்

மிக்ஸோபதி என்கிற கலப்பு மருத்துவத்தை எதிர்த்து சேலத்தில் இந்திய மருத்துவச் சங்கத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மூன்றாவது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 11 Feb 2021, 5:24 pm
கலப்பு மருத்துவ முறையைக் கைவிடும் வரை தங்களது போராட்டம் தொடரும் என தேசிய மருத்துவ போராட்டக் குழு இணைத் தலைவர் டாக்டர் பிரகாசம் தெரிவித்துள்ளார்..
Samayam Tamil mixopathy protest


மத்திய அரசு சுகாதாரத் துறையில் ஆயுஸ் மற்றும் அலோபதி மருத்துவத்தை இணைத்து மிக்‌ஸோபதி என்கிற கலவை மருத்துவ முறையை அறிவித்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் உள்ள இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கலவை மருத்துவ முறையை நீக்க வேண்டும் என கடந்த 1ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டம் இந்திய அளவில் மருத்துவர்களால் நடைபெற்று வருகிறது. சேலத்தில் இந்திய மருத்துவ சங்க மருத்துவர்கள் கடந்த ஒன்பதாம் தேதி முதல் சேலம் இந்திய மருத்துவ சங்க கட்டிடத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

Adani port: 11 ஆண்டுகளாக ஏமாற்றும் அதானி குழுமம்...போராட்டத்தில் குதித்த மக்கள்

இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டு கலவை மருத்துவ முறையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இந்தியா முழுவதும் மருத்துவர்கள் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய அரசு இதுவரை தங்களை அழைத்து பேசாதது வேதனை அளிக்கிறது. கலப்பு முறை மருத்துவத்தை கைவிடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்கிறார், தேசிய மருத்துவ போராட்டக் குழு இணைத் தலைவர் டாக்டர். பிரகாசம்.

அடுத்த செய்தி