ஆப்நகரம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம்!

சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 May 2022, 10:52 am
சேலம் மாவட்டம், மேட்டூரில் உள்ள 2 அனல் மின் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 1,440 யூனிட் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் பிரிவில் 210 மெகாவாட் வீதாம் தலா 4 அலகுகளும், இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது.
Samayam Tamil Mettur Thermal Power Plant
கோப்புப்படம்


இதில், முதல் பிரிவில் 840 மெகாவாட் மின் உற்பத்திக்கு 12,000 டன் நிலக்கரியும், 2- ஆவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்திக்கு 14,000 டன் நிலக்கரியும் நாள்தோறூம் தேவைப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 7,000 டன் அளவுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 2, 3, 4 ஆகிய 3 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.

முதல் அலகில் மட்டும் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோல், 2-ஆவது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய திறன் இருந்தும், நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 340 மெகாவாட் அளவுக்கு மட்டுமே மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி M32 வெல்ல அட்டகாசமான வாய்ப்பு. இந்த படிவத்தை பூர்த்தி செய்து பல கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லுங்கள்

தமிழகம் முழுவதும் ஏற்கனவே அறிவிக்கப்படாத மின் வெட்டால் மக்கள் அவதி அடைந்து வருவதாக கூறப்படும் நிலையில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்படுவதால் மேலும் மின் தடை ஏற்பட வாய்ப்புள்ளதோடு, பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி