ஆப்நகரம்

சேலத்தில் கொரோனா உச்சம்: வெளியே வந்தால் வாகனம் பறிமுதல்!

சேலம் மாவட்டம் எடப்பாடியில் இதுவரை 700க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்தும் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Samayam Tamil 18 May 2021, 6:00 pm
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு நடைமுறையைக் கடுமையாக்கி உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள் கொரோனா தொற்று தாக்கம் தெரியாமல் வெளியில் சுற்றி வருகின்றனர்.
Samayam Tamil சேலத்தில் கொரோனா உச்சம்: வெளியே வந்தால் வாகனம் பறிமுதல்!


இதனைக் கட்டுப்படுத்தும் வகையில் எடப்பாடி காவல் ஆய்வாளர் உட்ரோ வில்சன் உத்தரவின்படி எடப்பாடி பஸ் நிலையம் அருகே பேரிகார்டு அமைத்து உதவி காவல் ஆய்வாளர்கள் பெரிய தம்பி, பிரகாஷ் மற்றும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது தேவையின்றி அந்த வழியாக வரும் இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்தனர். அப்படி இதுவரை 700க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக இந்த சோதனையின்போது 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை எடப்பாடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் செத்தாலும் பரவாயில்லை எனச் சேலம் மக்கள் படையெடுப்பு!

ஒரே நாளில் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் இனி காவல்துறையின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என்றும் எடப்பாடி உதவி காவல் ஆய்வாளர் பெரியதம்பி தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி