ஆப்நகரம்

பொதுச்செயலாளராக முதல் பிறந்தநாள்: சேலத்தில் குவிந்த தொண்டர்கள்... கேக் வெட்டி இபிஎஸ் கொண்டாட்டம்!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 69-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டி கட்சி நிர்வாகிகளுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சீருடை புடவை மற்றும் இனிப்புகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 12 May 2023, 10:56 am
அதிமுகவில் கடந்த ஆண்டு ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே மோதல்போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து, பொதுக்குழு நடைபெற்ற அன்று அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். தொடர்ந்து, ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்தி வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. தற்போது, அதிமுக முழுவதுமாக எடப்பாடி கட்டுப்பாட்டில் வந்துவிட்டது என்றே சொல்லலாம்.
Samayam Tamil eps
eps


பொதுச்செயலாளர் ஆனதும் முதல் பிறந்தநாள்

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு இன்று பிறந்தநாள். பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தமிழ்நாடு முழுவதும் அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கேக் வெட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு காலை முதலே கட்சி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இல்லத்தின் முன்பு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

கேக் வெட்டி இபிஎஸ் கொண்டாட்டம்

eps birthday celebration


இதனிடையே, சேலம் மாநகர அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமிக்கு கேக் வெட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 69வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு 69 கிலோவில் கேக் வெட்ட நிர்வாகிகள் ஏற்பாடு செய்தனர். தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வாழ்த்து மழையில் நனைந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவினர் புடைசூழ உற்சாகமாக கேக் வெட்டினார்.
ஓபிஎஸ் அணியில் ஓட்டை?... அதிருப்தியில் வைத்திலிங்கம்?... எடப்பாடியின் வியூகம்!
தொடர்ந்து, நிர்வாகிகளுக்கு கேக் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதனிடையே, தொடர்ந்து அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சீருடை புடவை மற்றும் இனிப்புகளை எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதிமுக பொது செயலாளர் ஆக பொறுப்பேற்ற பிறகு எடப்பாடி பழனிசாமியின் முதல் பிறந்தநாள் இது என்பதால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி