ஆப்நகரம்

மாணவர்கள் கல்விக்கடனைச் சேலத்தில் ஈசியாக பெறலாம்: காரணம் இதுதான்!

மாவட்ட அளவில் கல்விக்கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி மையம் தொடங்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Jun 2021, 1:49 pm
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்குக் கல்விக் கடன் வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது.
Samayam Tamil மாணவர்கள் கல்விக்கடனைச் சேலத்தில் ஈசியாக பெறலாம்: காரணம் இதுதான்!


கூட்டத்தில் ஏழை, எளிய மாணவியர்களுக்கு வங்கிகளில் கல்விக்கடன் வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இதன் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவியர்களின் எதிர்காலத்தில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

அதேபோல் கல்விக் கடன் வழங்குவதன் மூலம் உயர்கல்வி பயில இயலாமல் இடைநிற்கும் மாணவ, மாணவியர்களின் விகிதத்தினை குறைக்க இயலும் என்பது கூட்டத்தில் அனைவரிடத்திலும் உணர்த்தப்பட்டது. இந்த சூழலில் மாவட்ட அளவில் கல்விக் கடன் பெற விரும்பும் மாணவ, மாணவியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி மையம் தொடங்கப்படவுள்ளதாகச் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்தார்.

10 வருடம் முதல்வர் பதவி, தேனிக்கு ஒன்றும் செய்யாத ஓபிஎஸ்: தங்கத் தமிழ்செல்வன் காட்டம்!
இதன் மூலம் மாணவ, மாணவியர்கள் கல்விக் கடன் பெறத் தேவைப்படும் ஆவணங்கள் குறித்தும், அவர்களுக்குத் தேவைப்படும் ஆலோசனைகளையும் பெற இயலும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் கார்மேகம், “மாவட்ட அளவில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வங்கியாவார்களை ஒருங்கிணைக்கும் வகையில் பொறுப்பு அலுவலராகத் திட்ட அலுவலரை நியமிக்கப்பட்டுள்ளதாக” அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி