ஆப்நகரம்

அம்மனின் அருளைப் பெற முதல்வரின் செம பிளான்!

தமது சொந்த தொகுதியான எடப்பாடி அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

Samayam Tamil 22 Jan 2021, 12:53 pm
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
Samayam Tamil கோப்பு படம்
எடப்பாடி அருகே கோனேரிகுப்பம் அம்மன் கோயிலில் ஜனவரி 25 ஆம் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பங்கேற்பு


நாளை (ஜனவரி 23) மற்றும் நாளை மறுநாள் (ஜனவரி 24) அவர் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். பிரச்சாரத்தை முடித்து கொண்டு அன்றிரவு சேலம் திரும்பினார்.

அதனைத் தொடர்ந்து, தமது சொந்த தொகுதியான எடப்பாடிக்கு அருகே உள்ள கோனேரிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஓம் சக்தி காளிம்மன் கோயிலில் திங்கள்கிழமை (ஜனவரி 25) நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கிறார்.

தேர்தல் பரப்புரையை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்... காரணம் தெரிஞ்சா அசந்திடுவீங்க!

இந்த விழாவை முடித்து கொண்டு அன்று காலேயே அவர் காரில் கள்ளக்குறிச்சி புறப்பட்டு செல்கிறார் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி