ஆப்நகரம்

ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு வண்டியில் வந்ததைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்!

ஆந்திராவிலிருந்து சேலம் மாவட்டத்திற்குக் கடத்தி வந்த 400 மூட்டைகள் கொண்ட 40 லட்ச ரூபாய் மதிப்பிலான கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். நான்கு பேர் அதிரடி கைது செய்தனர்.

Samayam Tamil 19 Jul 2021, 9:27 am
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து சேலம் மற்றும் மதுரைக்குக் கஞ்சா கடத்தப்படுவதாகச் சேலம் மாவட்டம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
Samayam Tamil ஆந்திராவிலிருந்து சேலத்திற்கு வண்டியில் வந்ததைப் பார்த்து அதிர்ந்த போலீஸ்!


இதனையடுத்து டிஎஸ்பி மனோகரன் உதவி ஆய்வாளர்கள் சரவணன் செல்வம் மற்றும் காவல்துறையினர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ராமலிங்கபுரம் பிரிவு ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனை நடத்தியபோது அதில் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 வாகனங்களிலிருந்து 400 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் 4 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினர்.

சேலம் கருமந்துறைச் சேர்ந்த வெங்கடேசன் என்பதும் மதுரையைச் சேர்ந்த ஆண்டிச்சாமி தனபாக்கியம் அழகேசன் என்பதும் தெரியவந்தது. அவர்களைக் கைது செய்த காவல்துறையினர் விசாரணையில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த சேலம், தென் மாவட்டங்களுக்குச் சபை செய்வதை இவர்கள் தொழிலாக வைத்துள்ளனர்.
போலீசாருக்கு விருப்பப் பணி இடம்; எஸ்.பி முடிவுக்கு இதுதான் காரணம்!
சேலம், மதுரை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்தனர். அவர்கள் மூலம் சிறு சிறு வியாபாரிகளுக்கு சப்ளை செய்தது தெரியவந்துள்ளது. யார்யாருக்கு சப்ளை செய்கிறார்கள் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் 50க்கும் மேற்பட்டவர்கள் பிடிபடுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலும் கடத்தலுக்குப் பயன்படுத்திய கார் மற்றும் டெம்போ பறிமுதல் செய்து சுமார் 40 லட்ச ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.

ஆந்திராவிலிருந்து சேலத்திற்குக் கடத்திவரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அடுத்த செய்தி