ஆப்நகரம்

சேலத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: திமுகவின் சூப்பர் திட்டம்!

சேலம் மற்றும் கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை பெருக்கும் நோக்கில் 105 ஏக்கரில் 500 கோடி ரூபாய் செலவில் அதிநவீன நூற்பாலை மற்றும் நெசவு ஆலை அமைக்க உள்ளதாகத் தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன் பேட்டி அளித்துள்ளார்.

Samayam Tamil 25 Jul 2021, 7:52 pm
சேலம் மாவட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு ஃபேபிரிக் உற்பத்தியாளர் சங்கத்தின் மாநில தலைவர் அழகரசன் கூறியதாவது:
Samayam Tamil சேலத்தில் 2 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு: திமுகவின் சூப்பர் திட்டம்!

தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்பட்ட முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற திட்டத்தின் கீழ் மாநாடு நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம்
மற்றும் கரூர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பினை பெருக்கும் நோக்கில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் அதிநவீன நூற்பாலை மற்றும் நெசவு ஆலை அமைக்கப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டது.

மத்திய அரசு ஃபேப்பரிக் உற்பத்தியாளர்களுக்கு வழங்கி வந்த ஏற்றுமதியில் எம்இஎஸ் ஏற்றுமதி மதிப்பீட்டில் 2 சதவீதத்தைத் திருப்பி வழங்கி வந்தனர். இந்தத் திட்டம் கடந்த ஜனவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திட்டத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்த நிலையில் அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

சேலத்தில் 5 ஏக்கர் பரப்பளவில் 170 கோடி முதலீட்டிலும் கரூர் மாவட்டத்தில் நூறு ஏக்கர் பரப்பளவில் 330 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த அதிநவீன ஆலை அமைக்கப்பட உள்ளது. இதனால் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி