ஆப்நகரம்

சேலத்தில் தக்காளி பெட்டி திருட்டு - வீடியோவால் சிக்கிய திருடன்

பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் தக்காளியை பெட்டியோடு திருடிச் சென்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

Samayam Tamil 29 May 2022, 11:02 am
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த பெருமாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவர் சொந்தமாக அதே பகுதியில் காய்கறி கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு வழக்கமாக காய்கறி லோடு அதிகாலை வந்து இறங்கும். அதைப்போல கடந்த வியாழக்கிழமை இவருக்கு தக்காளி பார்சல் இயக்குபவர் 60 கிலோ எடையுள்ள 2 கிரேடு தக்காளி பெட்டியை இறக்கி வைத்துள்ளார்.
Samayam Tamil Salem Tomato thief arrest


காலையில் வந்து கடை உரிமையாளர் சங்கர் தடையை திறப்பதற்காக வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு கிரேடு தக்காளி பற்றி மட்டுமே இருந்தது. அதனைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

பின்னர் தக்காளி இயக்கியவர்தான் தவறுதலாக இறக்கி வைத்திருப்பார் என தக்காளி இறக்கி வைத்தவரிடம் போன் செய்து கேட்டபோது அவர் இரண்டு பெட்டி இறக்கி வைத்ததாக தெரிவித்துள்ளார். பதறிப்போன சங்கர் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார்.

அந்த சிசிடிவி கேமரா பதிவில் தக்காளியை இறக்கி வைத்த சிறிது நேரத்தில் மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து தக்காளியை பெட்டியோடு திருடிச் சென்றது தெரியவந்தது. அதனை ஆதாரமாக வைத்து கடை உரிமையாளர் சங்கர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த சிசிடிவி பதிவு செய்த போலீசார் மர்ம நபரின் இருசக்கர வாகனத்தின் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் அந்த மர்ம நபர் வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியை சேர்ந்த சின்ராஜ் (32) என்பது தெரியவந்தது. அதுமட்டுமில்லாமல் அவர் ஏற்கனவே சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த திடுக்கிடும் உண்மையும் தெரியவந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து இளம்பிள்ளை பகுதியில் தக்காளி திருடிய வழக்கில் மகுடஞ்சாவடி போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி