ஆப்நகரம்

சேலத்திற்கு ஆக்சிஜன் தராத அரசு: நோயாளிகள் தடை, மருத்துவர்கள் போராட்டம்!

சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் கூட்டம் அதிகரித்து வரும் சூழலில் அனுமதிக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Samayam Tamil 14 May 2021, 6:37 pm
சேலம் மாவட்டத்திற்கு வழங்க வேண்டிய ஆக்ஸிஜன் பிற மாவட்டங்களுக்குப் பகிர்ந்து அனுப்பப்பட்டது. இதனால் சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil சேலத்திற்கு ஆக்சிஜன் தராத அரசு: நோயாளிகள் வரக்கூடாது என மருத்துவர்கள் போராட்டம்!


இதைக் கருத்தில்கொண்டு கொரானா நோயாளிகளைத் தனியார் மருத்துவமனையில் இன்று முதல் அனுமதிக்க மாட்டோம் என இந்திய மருத்துவ சங்கம் அறிவித்துள்ளது.

அறிவிப்பு வெளியானதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக 8 டன் அளவிற்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், தர்மபுரியில் ஒரு லட்சத்தைக் கடந்த பாதிப்பு!

இதனால் மீண்டும் கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் படுகிறார்கள். 15 டன் அளவிற்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலையில் 8 டன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தட்டுப்பாடு மீண்டும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் கிடைக்காத பட்சத்தில் கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட மாட்டார்கள் என இந்திய மருத்துவ சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி