ஆப்நகரம்

சேலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி.. சிக்னல் கிடைக்காததால் பெரும் சேதம் தவிப்பு!

சேலம் மாவட்டம் ஓமலூர் ரயில் நிலையம் அருகே தண்டவாள மாற்றியில் 2 அடி தண்டவாள துண்டை வைத்து ரயிலை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 13 Aug 2022, 7:51 am

ஹைலைட்ஸ்:

  • சேலம் அருகே ரயிலை கவிழ்க்க சதி
  • சிக்னல் கிடைக்காததால் பெரும் சேதம் தவிப்பு!
  • சுதந்திர தினத்தை சீர்குலைக்க திட்டமா?
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil omalur railway station
சேலம் மாவட்டம், ஓமலூர் நிலையம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் உள்ள ஜல்லிகளை சீர் செய்யும் இயந்திரம் மேட்டூர் மார்க்கத்தில் இருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஓமலூர் ரயில் நிலையத்துக்கு வருவதற்கு முன்பு சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு முன் அந்த ரயிலுக்கு சிக்னல் கிடைக்காததால் நிறுத்தப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ரயில் ஓட்டுனர் உடனடியாக ஓமலூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் ஸ்டேஷன் மாஸ்டர் மிருத்தி குமார் மற்றும் கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தனர்.

அப்போது, ஓமலூர் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 500 மீட்டர் இடைவெளியில் ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயிலை மாற்றுவதற்கான தண்டவாள இடைப்பட்ட பகுதியில் சுமார் 2 அடி நீளமுள்ள தண்டவாள துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அந்த தண்டவாள துண்டை அப்புறபடுத்தி அந்த ரயில் செல்வதற்கு வழி அமைத்து கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து ஓமலூர் ஸ்டேஷன் மாஸ்டர் சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

சுதந்திர தினம் நெருங்கும் நிலையில் ஏதாவது தீவிரவாத செயலாக இருக்குமோ? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்து வருகின்றனர். நல்வாய்ப்பாக இந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் வராமல் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

அடுத்த செய்தி