ஆப்நகரம்

உலக மகளிர் தினத்தில் தரமான சம்பவம் சேலம் கலெக்டர் சூப்பர் உத்தரவு!

உலக மகளிர் தினத்தையொட்டி சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு கோலம் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

Samayam Tamil 8 Mar 2021, 12:51 pm
சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு ரங்கோலி கோல விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
Samayam Tamil உலக மகளிர் தினத்தில் தரமான சம்பவம் சேலம் கலெக்டர் சூப்பர் உத்தரவு!


இதில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்ந்த பெண்கள் கலந்துகொண்டு தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளைச் சின்னங்களைக் கோலங்களாக வரைந்து வண்ண வண்ணப் பொடிகளைத் தூவி அழகு படுத்தினர். இதனைச் சேலம் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்த்து ரசித்தார்.

தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி ரங்கோலி வரைந்த அனைத்து பெண்களுக்கும் ஆட்சியர் இனிப்புகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

எடப்பாடி ஊரில் நடந்த மாரியம்மன் எருது திருவிழா..!

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரையப்பட்டுள்ள இந்த ரங்கோலி கோலங்களின் மூலம் சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றும் முடியாதவர்களுக்குத் தபால் வாக்கு மூலம் தனது வாக்கைப் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நிகழ்ச்சியில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி