ஆப்நகரம்

மார்கழி பௌர்ணமி: காத்திருந்து ஆருத்ரா தரிசனம் செய்த பக்தர்கள்

​சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் ஆருத்ரா தரிசனம் பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.

Samayam Tamil 30 Dec 2020, 12:44 pm
தமிழகம் முழுவதுமுள்ள சிவன் ஆலயங்களில் மார்கழி பவுர்ணமி திருவாதிரை நட்சத்திரத்தை ஒட்டி ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
Samayam Tamil காத்திருக்கும் பக்தர்கள்


அந்த வகையில், சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில் ஆருத்திரா தரிசனம் வெகுவிமர்சையாக நடைபெற்றது இதனையொட்டி நேற்று இரவு முதலே சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திமுக கிராம சபைகளால் ஆட்டம் காண்கிறதா அதிமுக

பால், பன்னீர், நெய், இளநீர, தேன் மற்றும் பல்வேறு பழ வகைகளை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து சுகவனேஸ்வரர் மற்றும் சொர்ணாம்பிகை தாயாருக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன

இதனை அடுத்து தாயாருடன் சுகவனேஸ்வரர் ஆருத்ரா கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை காண ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நெடு நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து சென்றனர். இதனை ஒட்டி காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அனைவரும் சமூக இடைவெளியோடு நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

அடுத்த செய்தி