ஆப்நகரம்

மத்திய அமைச்சரை அழைத்துப் போராட்டம் நடத்துவோம்: பாஜக நாகராஜ்

நீரோடை பாதையை சீர் செய்து தர வேண்டும். இல்லையென்றால் மத்திய நீர்வள அமைச்சர் அவர்கள் தலைமையில் சேலத்தில் மாபெரும் போராட்டம் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்படும்.

Samayam Tamil 18 Dec 2020, 8:14 am
சேலத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி ஏரியை தூர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் இல்லையென்றால் சேலத்தில் மாபெரும் போராட்டம் விவசாய பேரணி நடத்தப்படும் என பாரதிய ஜனதா கட்சியின் விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil பனைமரத்துப்பட்டி அணை


மத்திய அரசின் வேளாண் சட்ட மசோதாவை பொது மக்களுக்கு தெளிவு படுத்தும் வகையிலும் பனைமரத்துப்பட்டி பகுதியில் உழவர் சேவை மையம் விவசாயிகளுக்காக துவக்கப்பட்டது. இதனை பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ் துவக்கி வைத்தார் .

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் கூறுகையில், “சேலத்தில் உள்ள பனமரத்துப்பட்டி ஏரி 2200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது இந்த ஏரி தற்போது ஒரு சொட்டு நீர் இன்றி முழுவதும் சீமை கருவேல மரங்களால் நிறைந்துள்ளது. மேலும் சேலம் ராசிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களின் நீராதாரமாக விளங்கி வந்த இந்த ஏரி, தற்போது சீமைக்கருவேல மரங்கள் நிறைந்த ஏரியாக உள்ளது மேலும் ஏரிக்கு வரும் நீரோடைகள் முழுவதும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனைத் தமிழக அரசிடம் கொண்டு சேர்ப்போம்.

#விவசாயிகளின்_நண்பன்_மோடி... பாஜகவின் அடுத்த யாத்திரை

ஒரு மாத காலத்திற்குள் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து இந்த ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி நீரோடை பாதையை சீர் செய்து தர வேண்டும். இல்லையென்றால் மத்திய நீர்வள அமைச்சர் அவர்கள் தலைமையில் சேலத்தில் மாபெரும் போராட்டம் மற்றும் விவசாயிகள் ஒன்றிணைந்து பேரணி நடத்தப்படும்.

மேலும் சேலம் மாவட்டத்தில் நீராதாரத்தை தமிழக அரசு சீரழித்துள்ளது வேதனை அளிக்கிறது குறிப்பாக திருமணிமுத்தாறு தற்போது முழுவதும் சாக்கடை கலந்து, பார்ப்பதற்கே மிகவும் வேதனையளிக்கிறது. இதனை முதலமைச்சர் கண்டும் காணாமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது உடனடியாக சீர் செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த சேலம் மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

அடுத்த செய்தி