ஆப்நகரம்

சுகவனேஸ்வரர் கோயில் திருப்பணி... அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு

கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலிலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

Samayam Tamil 18 Nov 2020, 6:40 pm
சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் குறித்து இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
Samayam Tamil sevur ramachandran


சேலம் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோவிலில் கடந்த 2018ம் ஆண்டு முதல் திருக்கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரூ. 86.59 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த பணிகளை இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்தார்.

தற்போது வரை எவ்வளவு பணிகள் நிறைவு பெற்றுள்ளன என்பதை அறநிலை துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்த அமைச்சர் மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து அம்மாபேட்டை அருகே சன்னியாசி குண்டு பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலிலும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் கோட்டை அழகிரிநாதர் சுவாமி திருக்கோயிலிலும் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு செய்தார்.

சபரிமலை ஐயப்பன் பக்தர்கள் திருச்சியில் விரதத்தை முடிக்க திட்டம்!


இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம், சக்திவேல் மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

அடுத்த செய்தி