ஆப்நகரம்

போக்குவரத்து அலுவலகத்தில் தரகரிடமிருந்த ரூ. ஒரு லட்சம்: எந்த அதிகாரிக்குச் செல்கிறது?

சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை காரணமாகக் குறிப்பிட்ட அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 11 Jan 2021, 11:49 pm
சேலம் மாவட்டத்தில் உள்ள தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், அலுவலகத்திற்கு வெளியே காத்திருந்த இடைத்தரகர்களிடமிருந்து ரூ. ஒரு லட்ச வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil போக்குவரத்து அலுவலகத்தில் தரகரிடமிருந்த ரூ. ஒரு லட்சம்: எந்த அதிகாரிக்குச் செல்கிறது?
போக்குவரத்து அலுவலகத்தில் தரகரிடமிருந்த ரூ. ஒரு லட்சம்: எந்த அதிகாரிக்குச் செல்கிறது?


சேலம் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக அதிகளவில் லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டு நிலவி வந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார்கள் சென்றது.

குற்றச்சாட்டை அடுத்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திங்கட்கிழமை மாலை அதிரடியாகக் குறிப்பிட்ட அலுவலகத்திற்குச் சென்று சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டது.

முதல்வரின் சொந்த தொகுதியிலேயே அப்பட்டமாய் மீறப்பட்ட கொரோனா விதிமுறைகள்!

இதையடுத்து அலுவலகத்தின் வெளியே காத்திருந்த இடைத்தரகர்களிடம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களிடமிருந்து ரூ. ஒரு லட்சம் வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தொடர்ந்து தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணபவன் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜாமணி ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி