ஆப்நகரம்

சேலம் தொகுதி முதல்வர் திட்டத்தை முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!

சேலம் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

Samayam Tamil 11 Jun 2021, 7:01 pm
திருச்சி, தஞ்சாவூர் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தனி விமானம் மூலம் சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வந்தடைந்தார்.
Samayam Tamil சேலம் தொகுதி முதல்வர் திட்டத்தை முக ஸ்டாலின் தொடக்கி வைத்தார்!


அங்கே அவருக்குச் சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கார் மூலம் அங்கிருந்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் சென்றார்.

அங்கு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனு அளித்திருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நலத்திட்ட உதவிகளை 10 பயனாளிகளுக்கு வழங்கிய முதல்வர், சேலம் மாவட்டத்தில் குறிப்பிட்ட திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

ஆத்தூர் கோட்டாட்சியராக இளம்பெண் சரண்யா: வந்தவுடனே சேலத்திற்கு எச்சரிக்கை!
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 977 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதில் உடனடியாக ஆயிரத்து 100 மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த மனுக்களின்படி நலத்திட்ட உதவிகள் இன்று முதல் வழங்கப்படுகிறது.

அடுத்த செய்தி