ஆப்நகரம்

எய்ட்ஸ் கட்டுப்பாடு பணியாளர்களுக்கு 9 ஆண்டுகளாக மாறாத சம்பளம்: சேலத்தில் தொடர் போராட்டம்!

கருப்பு பேட்ச் அணிந்து தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்...

Samayam Tamil 2 Aug 2021, 7:40 pm
எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேசிய அளவில் 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
Samayam Tamil எய்ட்ஸ் கட்டுப்பாடு பணியாளர்களுக்கு 9 ஆண்டுகளாக மாறாத சம்பளம்: சேலத்தில் தொடர் போராட்டம்!


ஆனால் இவர்களின் ஊதிய மாற்றம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அமல் படுத்தப்படாமல் உள்ள. இதையடுத்து ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வலியுறுத்தி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாகச் சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவமனையில் உள்ள ஏஆர்டி மையத்தில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் கார்ப்ரேட் நலன்களுக்காகத் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி அமைப்பதைக் கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் சங்க உறுப்பினர்கள் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய அரசைக் கண்டித்துக் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாநிலப் பொருளாளர் ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி