ஆப்நகரம்

சேலம் மாமன்ற கூட்டம்: குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் செய்தது யார்?.. திமுக, அதிமுகவினரிடையே காரசார வாக்குவாதம்!

சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் செய்தது யார்? என்பதில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 31 Jan 2023, 3:35 pm

ஹைலைட்ஸ்:

  • குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் செய்தது யார்?
  • திமுக அதிமுகவினர் இடையே காரசார வாக்குவாதம்
  • வெளிநடப்பு செய்த அதிமுகவினரை சமாதானம் செய்த திமுகவினர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil திமுக, அதிமுகவினரிடையே காரசார வாக்குவாதம்
சேலம் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் குப்பை வண்டி வாங்கியதில் ஊழல் செய்தது யார்? என்பதில் திமுக, அதிமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாநகராட்சி மன்ற இயல்பு கூட்டம் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. மாநகர மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ் முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கலந்து கொண்டு தங்கள் பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சனையை குறித்து எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர் இமையவர்மன் பேசும்போது சேலம் மாநகராட்சி மன்றத்தை இழிவுபடுத்தும் வகையில் சிலர் அவதூறு செய்திகளை பரப்பி வருகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.


அப்போது குறுக்கிட்ட ஆளுங்கட்சித் தலைவர் ஜெயக்குமார் தற்போது குற்றச்சாட்டு வைக்கும் மாமன்ற உறுப்பினர் இமையவர்மன் தனது வலைதளத்தில் மாநகராட்சியை பற்றியும் கூட்டணி கட்சியை பற்றியும் அவதூறாக பதிவிட்டுள்ளார். இதற்காக அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது மாநகராட்சி என கேள்வி எழுப்பியதால் மன்ற கூட்டத்தில் பரபரப்பு சலசலப்பு நிலவியது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தனிப்பட்ட காணங்களுக்காக மன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் பொதுவான குற்றச்சாட்டுகளை வைத்து மக்களுக்கு தேவையான வற்றை பேசுங்கள் என ஆளுங்கட்சித் தலைவர் தெரிவித்தார். விசிக மாமன்ற உறுப்பினர்களுக்கும், ஆளுங்கட்சித் தலைவர் ஜெயக்குமாருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது. இதனை யடுத்து மாநகராட்சி மேயர் தலையிட்டு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இதனைதொடர்ந்து மாமன்ற உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சி பகுதியில் குப்பைகளை வீடுகள் தோறும் சென்று பெறுவதற்காக, அதிமுக ஆட்சிக் காலத்தில் பேட்டரி வாகனம் வாங்கப்பட்டது. முறைகேடாக கூடுதலாக விலை நிர்ணயம் செய்து குப்பை வண்டிகள் வாங்கியதில் பல கோடி ஊழல் நடந்துள்ளது. இது வெட்ட வெளிச்சமாக அனைவருக்கும் தெரிந்த விசியம். தற்போது அந்த அனைத்து வானங்களும், பழுது அடைந்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை எல்லாம் பொறுட்படுத்திக் கொண்டு தற்போது திமுக ஆட்சியில் சேலம் மாநகராட்சிக்கு கூடுதல் வண்டிகள் வாங்கப்பட்டு, தற்போது வீடுகள் தோறும் குப்பைகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.‌

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் யாதவ மூர்த்தி, கடந்த ஆட்சி காலத்தில் குப்பை வண்டிகள் வாங்க நிதிமட்டுமே ஒதுக்கப்பட்டதாகவும், அதன் நிதியை குறிப்பிட்டு வாங்குவதில் அதிகாரிகளின் நடவடிக்கை என்றும், இதற்கும் அதிமுகவுக்கும் சம்மதம் இல்லை என தெரிவித்ததால் மன்ற கூட்டத்தில் மேலும் பரபரப்பு நிலவியது.

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் சம்பள விவகாரம்: இன்னும் 2 நாள் தான் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

திமுக உறுப்பினர்கள் அதிமுகவின் ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியதால் மன்ற கூட்டத்தில் மேலும் சலசலப்பு நிலவியது. மேலும் அதிமுக உறுப்பினர்கள் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிரச்சினைகளை தெரிவிப்பதற்கு, மன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், பேசுவதற்கு கருத்து சுதந்திரம் இல்லை எனக்கூறிஅதிமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக உறுப்பினர்கள் மன்ற கூட்டம் முடிவடையும் தருவாயில் வெளிநடப்பு செய்வது தேவையற்ற ஒன்று என்றும், மக்களின் பிரச்சினைகளை பேசாமல் கடந்த கால பிரச்சனைகளை பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை இடைமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மேலும் மன்ற கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. அதிமுக உறுப்பினர்கள் சமாதானம் அடைந்து மீண்டும் இருக்கையில் அமர்ந்தனர்.

கடந்த ஒரு வருடத்தில் இன்றைய கூட்டத்தில் தான் மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் வார்டுபகுதியில் நடைபெறும் உரிமைக்கான பிரச்சனைகளை காரசாரமாக எழுப்பியதோடு, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திட்டங்கள் குறித்து வெளிப்படையான வாக்குவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இன்றைய மாமன்ற கூட்டம் சலசலப்பக்கும், வாக்குவாதத்திற்கும் பஞ்சமில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி