ஆப்நகரம்

சேலம்: பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் கதவை உடைத்து முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

தாரமங்கலத்தை அடுத்த மாரியம்மன் கோயிலில் கதவை உடைத்து முகமூடி அணிந்த கொள்ளையர்கள் திருடன் முயற்சி செய்துள்ளனர். அது குறித்த சிசிடிவி கட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Curated byM.முகமது கெளஸ் | Samayam Tamil 20 Apr 2023, 3:33 pm

ஹைலைட்ஸ்:

  • தாரமங்கலம் அருகே மாரியம்மன் கோயிலில் திருட்டு முயற்சி
  • நள்ளிரவில் முகமூடி அணிந்து வந்து மர்ம நபர்கள் கைவரிசை
  • அலாரம் ஒலி எழுப்பியதை கேட்டு பயந்து ஓடிய திருடர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Robbers
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை அடுத்த பவளத்தானுர் பகுதியில் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வருடா வருடம் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி அந்த கோயிலில் கடந்த பத்து நாட்களுக்கு முன்புதான் திருவிழா நடைபெற்ற முடிந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று இரவு 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கொண்டு கோயிலுக்கு வந்து கோயிலின் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த மர்ம நபர்கள் கோயில் உள்ளே தங்களது கைவரிசையை காட்டி திருடன் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களது துரதிஷ்டம், கோயிலில் உள்ளே பிரகாரத்தில் பொருத்தப்பட்டிருந்த அபாய எச்சரிக்கை அலாரம் சத்தத்தை எழுப்பியது.

அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு முகமூடி கொள்ளையர்களும் இரு சக்கர வாகனத்தில் வந்தவரே தப்பி சென்று விட்டனர். ஆனால் இது குறித்த வீடியோ காட்சி அங்குள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.



இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் உடனடியாக இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். அந்த புகாரி பெயரில் காவல்துறை ஆய்வாளர் தொல்காப்பியன் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆயுள் மேற்கொண்டு வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கினர்.

கம்பத்தில் நிர்வாண பூஜை செய்யும் போலி சாமியார்.. வயது முதிர்ந்த தம்பதியினர் அதிருப்தி.. தேனி எஸ்பி.,யிடம் புகார் மனு..

முதற்கட்ட விசாரணையாக கோயிலில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகள் கைப்பற்றப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

இரவு நேரத்தில் கோயிலுக்குள் மர்ம நபர்கள் புகுந்து திருடி செல்ல முயற்சி செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியிலும் கோயில் நிர்வாகத்தினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு புறம் இருக்க திருட்டு சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எழுத்தாளர் பற்றி
M.முகமது கெளஸ்
நான் முகமது கெளஸ். ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டமும் ஊடகவியல் துறையில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளேன். டிஜிட்டல் ஊடகத்தில் எனக்கு இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளது. க்ரைம் சார்ந்த செய்திகள் எழுதுவதில் முழு ஈடுபாடு காட்டும் ஆர்வம் உண்டு. தற்போது டிஜிட்டல் ஊடகமான டைம்ஸ் ஆப் இந்தியா, சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணிபுரிந்து வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி