ஆப்நகரம்

சேலம்: தரையில் நிழல் விழவே இல்லை, அதிசயம் ஆனால் உண்மை!

சேலத்தில் சரியாக மதியம் 12.16 மணிக்கு நிழல் தரையில் தெரியாமல் மறையும் நிகழ்வு உணரப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிழல் மறைந்ததைத் திரளான மாணவர்கள் பார்வையிட்டனர்.

Samayam Tamil 20 Apr 2021, 6:43 pm
ஒரு குறிப்பிட்ட பகுதியில் தொடுவானத்திற்கு நேர் செங்குத்தான உச்சியில் சூரியன் வரும்போது, நிழல் முழுவதுமாக மறைகிறது. வருடத்திறகு இரு முறை நடக்கும் இந்த அரிய நிகழ்வு அனைத்து இடங்களிலும் நிகழ்வதில்லை.
Samayam Tamil சேலம்: தரையில் நிழல் விழவே இல்லை, அதிசயம் ஆனால் உண்மை!


23.5 மற்றும் மைனஸ் 23.5 அட்சரேகை கொண்ட பகுதியில் மட்டும் ஏற்படுகிறது. ஒரு இடத்தில் அட்சரேகையும், சூரியனின் சாய்வு கோணமும் சமமாக இருக்கும் போது நிழல் பூஜ்ஜியமாகிறது.

அதன்படி சேலத்தில் பூஜ்ய நிழல் இன்று ஏற்பட்டது. சரியாக 12.16 மணிக்கு நிழல் முற்றிலும் மறைந்தது. இந்த அரிய நிகழ்வை மாணவர்களும் பொதுமக்களும் தெரிந்து கொள்ளும் வகையில் மஜ்ராகொல்லப்பட்டி பகுதியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாநில வானவியற் கருத்தாளர் ஜெயமுருகன் சில பொருட்களை வைத்து செயல்முறை விளக்கம் அளித்தார்.

கலெக்டர் அலுவலகத்தில் தாரை தப்பட்டையுடன் கரகாட்டம்

நிழல் ஏன் மறைகிறது. இந்த நிகழ்வால் வானவியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு அவர் எடுத்துரைத்தார். இதனை மாணவர்கள் ஆர்வத்தோடு கண்டு ரசித்தனர்.

நிழல் மறையும் நாள் குறித்து அனைத்து மாணவர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு பாடப் புத்தகத்தில் இந்த அறிவியல் நிகழ்வை இடம்பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அரசுக்கு வலியுறுத்தினர். இந்த நிகழ்வு அடுத்து வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதிதான் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி