ஆப்நகரம்

ஆடி கடைசி வெள்ளி: காரைக்குடி முத்து மாரியம்மன் கோவிலில் 108 கோமாதா பூஜை; திரளான பக்தர்கள் வழிபாடு!

ஆடி மாத கடைசி வெள்ளியில் காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் 108 கோமாதா‌ பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 12 Aug 2022, 6:53 pm
தமிழ் மாதத்தில் ஆடி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.‌ ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் பசுக்களை வழிபட்டால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
Samayam Tamil காரைக்குடி முத்து மாரியம்மன் கோவிலில் 108 கோமாதா பூஜை


அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் ஆடி மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை அன்றும் அம்பாள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இந்நிலையில் ஆடி மாதம் கடைசி வெள்ளியான இன்று 108 பசு, கன்றுகளுக்கு கோமாதா பூஜை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பூஜை செய்யப்பட்ட பசு, கன்றுகளை வணங்கி வழிபட்டு செய்தனர் முன்னதாக கணபதி பூஜை நடைபெற்றது.

வேற லெவலுக்கு மாறிய சிவகங்கை அரசு மருத்துவமனை; 48 லட்சம் மதிப்பில் டயாலிசிஸ் இயந்திரங்கள்.. துவக்கி வைத்த அமைச்சர்!

ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. காரைக்குடி தொழிலதிபர் சாந்தி ரோடு வேஸ் சரவணன் குடும்பத்தார் சார்பில் கோமாதாகளுக்கு வேஸ்டி, துண்டு, சேலை, மாலை, அர்சனை பொருட்கள், ஒரு கிராம் வெள்ளி பொட்டு, கோமாதா உரிமையாளர்களுக்கு காலை உணவுகளும் வழங்கினர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி