ஆப்நகரம்

அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்த 10ஆம் வகுப்பு மாணவி.. விஷம் குடித்த 12ஆம் வகுப்பு மாணவன்.. திருப்புவனத்தில் பரபரப்பு!

அரசு பள்ளி மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 16 Aug 2022, 1:59 pm

ஹைலைட்ஸ்:

  • திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவி
  • தேர்வு பயத்தில் கழிவறைக்கு சென்று கை நரம்பை அறுத்து விபரீதம்
  • பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பள்ளி மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள வடகரை கிராமத்தைச் சேர்ந்த சரவணக்கண்ணன் மகள் திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் இன்று சமூக அறிவியல் தேர்வு நடக்க இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிக்கு வந்த மாணவி தேர்வுக்கு தன்னை சரியாக தயார் செய்யவில்லை என்ற பயத்தில் முதலில் பள்ளி கழிவறைக்குள் சென்று தனது கை நரம்பை அறுத்துள்ளார். அதை பார்த்த சக மாணவிகள் சத்தம் பேட்டுக்கொண்டே ஆசிரியர் சென்று கூற சென்றுள்ளனர்.
அந்த தருணத்தில் அந்த மாணவி அங்கிருந்து ஓடி வந்து பள்ளியின் இரண்டாவது தளத்திலிருந்து குறித்துள்ளார். இதில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். இவரை உடனடியாக அங்கிருந்து மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஓவர் ஸ்பீடில் வந்த தனியார் கல்லூரி பேருந்து; 5ஆம் வகுப்பு மாணவன் துடிதுடித்து இறப்பு.. ராசிபுரத்தில் பரபரப்பு!

தேர்வு பயத்தில் பள்ளி மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்துள்ளது. தற்போது காவல்துறையின் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இப்பள்ளி அருகே உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் விஷம் அருந்துயுள்ளது கேள்விக்குறியாக உள்ளது. இதுகுறித்தும் போலீஸ் விசாரணை செய்து வருகிறது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி