ஆப்நகரம்

sasikala: சசிகலாவின் அரசியல் பயணம்... கருணாஸ் அடேங்கப்பா கருத்து!

சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து பிரபல நடிகர் கருணாஸ் அடேங்கப்பா என்று சொல்லும் விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 28 Oct 2021, 9:36 am

ஹைலைட்ஸ்:

  • மருது சகோதரர்கள் குருபூஜை விழா காளையார்கோவிலில் இன்று நடைபெற்றது.
  • முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர் கருணாஸ் பங்கேற்பு.
  • சசிகலாவின் அரசியல் பயணம் குறித்து அடேங்கப்பா எனும் விதத்தில் கருணாஸ் கருத்து.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் இன்று மருது சகோதரர்கள் குருபூஜை விழா நடந்து வருகிறது இதில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை நிறுவனருமான கருணாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
சட்டமன்றம் ஒரு வெட்டி மன்றமாக செயல்படுகிறது. நீங்கள் செய்ததைதான் நாங்களும் செய்கிறோம் என்ற புராணப் பாடல் பாடும் மன்றமாக உள்ளது. ஆட்சி செய்பவர்கள் தங்களது சொந்தப் பணத்தில் மக்களுக்கு எதுவும் செய்வதில்லை. மக்களின் வரிபணத்தில் மக்களுக்கான திட்ட பணிகளை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதே உண்மையான ஜனநாயகம்.

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டால் பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் சமூகநீதியை காக்க நினைக்கும் திமுக அரசு ஜாதிரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்கியது மற்ற சமுதாயத்தினரை வஞ்சிக்கும் செயலாகும்.


தமிழக சட்டமன்ற தேர்தலின்போது மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயர் வைக்கப்படும் என்ற வாக்குறுதியை கூறி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனை அவர் விரைவாக நிறைவேற்ற வேண்டும்.

சசிகலா சிறையில் இருந்து வெளிவரும் போதே அரசியல் பயணத்தை தொடங்கிவிட்டார். திமுகவின் செயல்பாடுகளை கவனித்து வருகிறேன். அதுகுறித்து இப்போது கருத்து கூற இயலாது. அதிமுகவின் செயல்பாடுகள் பிடிக்காமலேயே கூட்டணியைவிட்டு வெளியேறினேன். எனவே அவர்களை பற்றி விமர்சிக்க விருப்பமில்லை என்று கருணாஸ் தெரிவித்தார்.

அடுத்த செய்தி