ஆப்நகரம்

குரூப் 2 குரூப் 4 தேர்வுகளுக்கு இலவச பயிற்சி மையம்... அசத்தும் அரசு அதிகாரிகள்!

தனியார் பயிற்சி மையங்களுக்கு போட்டியாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு இலவச பயிற்சி அளிக்கும் மாவட்ட போட்டி தேர்வு பயிற்சி மையம் பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 26 Apr 2022, 10:49 am

ஹைலைட்ஸ்:

  • தனியார் பயிற்சி மையங்களுக்கு போட்டியாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பயிற்சி மையம்
  • தினம் தோறும் பயிற்சி
  • தினம் ஒரு தேர்வு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil இலவச பயிற்சி மையம்
தமிழகத்தில் சில மாவட்டங்களில் உள்ள அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் விருப்பத்தின் பெயரில் தேசிய இயக்கம் சார்பில் குரூப் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதன் அடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் மூன்று பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புக்களை குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணிபுரியக்கூடிய 50க்கும் மேற்பட்ட பயிற்சி ஆசிரியர்கள், கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள் 300 பேருக்கு அர்ப்பணிப்போடு சிறந்த பயிற்சி அளித்து வருகிறார்கள்.
இன்றைய சூழலில் தனியார் பயிற்சி மையங்கள் வரக்கூடிய குரூப் IV மற்றும் குரூப் II தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது என்று பலவகையான விளம்பரங்களை செய்து ஆயிரக்கணக்கில் மாணவர்களிடம் கட்டணமாக வசூல் செய்து வருகிறார்கள்.


கட்டணத்தை கட்டி படிக்க முடியாத மாணவர்களுக்கு அரசு நடத்தும் இந்த பயிற்சி வகுப்புகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி வருகின்றது. இந்த பயிற்சி மையத்தில் பெரிய தனியார் பயிற்சி மையங்களில் உள்ள புத்தகங்களை விட அதிக அளவிலான புத்தகங்கள், அதற்கான மெட்டீரியல்கள் வைக்கப்பட்டுள்ளது.

காலையில் துவங்கும் இந்தப் பயிற்சி வகுப்புகள் இரவு வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வகுப்பிற்கும் தனித் தனியே பயிற்சியாளர்கள் வந்து பயிற்சி அளித்து செல்கிறார்கள். அதிக அளவிலான கிராமப்புற மாணவர்கள் இந்த பயிற்சி வகுப்பில் பயின்று வருகிறார்கள்.

இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லும் வாய்ப்பைப் பெறுங்கள்.

உணவுடன் வந்து வகுப்புகள் முடிந்து உணவு உட்கொண்டு மீண்டும் அடுத்த வகுப்பிற்கு தயாராகி வருகிறார்கள். இதில் பயிற்சி அளிக்கும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில்: "சிவகங்கை மாவட்டத்தில் இந்த அரசு பயிற்சி மையத்தில் இலவசமாக பயிற்சி பெற்ற மாணவர்கள் நடைபெற உள்ள குரூப் தேர்வுகளில் அதிக அளவில் வெற்றி பெற்றார்கள் என்ற சாதனையை எட்டுவார்கள்.

மருந்தக உரிமையாளரை கடத்திய மர்ம நபர்கள்... தீவிர வேட்டையில் போலீஸார்!

மேலும் பலவகையான விளம்பர யுத்திகளை மேற்கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தும் தனியார் மையத்தினால் மட்டுமே வெற்றியை ஈட்டித் தர முடியும் என்ற மாணவர்கள் மத்தியில் உள்ள எண்ணத்தை நீக்கிவிட்டு முயற்சி செய்தால் எங்கும் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துவதே எங்களுடைய லட்சியம்" என்று கூறினார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி