ஆப்நகரம்

சிவகங்கை; புத்தகம் ஏற்றி வந்த லாரி... டயர் வெடித்து விபத்து!

தேவகோட்டை அருகே அரசு பள்ளிக்கு புத்தகம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

Samayam Tamil 14 May 2023, 4:25 pm

ஹைலைட்ஸ்:

  • அரசு பள்ளிக்கு புத்தகம் ஏற்றி வந்த லாரி
  • டயர் வெடித்து சாலையில் கவிழ்ந்து விபத்து
  • விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்
  • சிதறிய புத்தகங்களை சேகரித்து உதவி செய்த அதிமுக எம்.எல்.ஏ
  • கிரேனை வரவழைத்து கவிழ்ந்த லாரி மீட்பு

ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil புத்தகம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது
புத்தகம் ஏற்றி வந்த லாரியின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது
சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிக்கு தமிழ்நாடு அரசு பாட புத்தகங்களை ஏற்றிக்கொண்டு சென்னையிலிருந்து ஆவினன்குடியை சேர்ந்த ஓட்டுநர் விஜய் (25) லாரியை ஒட்டி வந்துள்ளார்.
லாரியின் பின்பக்க டயர் வெடிப்பு

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு புத்தகங்களை கொண்டு வந்த போது திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் காணத்தான்காடு அருகே வந்தபோது லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில் லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அதிமுக எம்.எல்.ஏ

இந்த விபத்தில் ஓட்டுநர் விஜய் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார். அப்போது சாலையில் அவ்வழியாக காரில் வந்த அதிமுக சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் காரில் இருந்து இறங்கி வந்து ஓட்டுநரிடம் நலம் விசாரித்தார்.
மானாமதுரையில் தைல மரங்களுக்கு இடையே உழவு பணி; கண்மாய்க்கு நீர்வரத்து தடை...விவசாயிகள் எதிர்ப்பு!
புத்தகங்களை சேகரித்த வாகன ஓட்டிகள்

பின்னர் விபத்தில் சிக்கிய லாரியில் இருந்து சிதறிய அரசு பள்ளி புத்தகங்களை எம்எல்ஏ செந்தில்நாதன் மற்றும் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் சாலையின் ஓரத்தில் சேகரித்து வைத்தனர்.

போலீசார் விசாரணை

பின்னர் கிரேனை வரவழைத்து கவிழ்ந்த லாரியை மீட்டனர். இந்த விபத்து சம்பவம் குறித்து ஆறாவயல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி